அண்மைய செய்திகள்

recent
-

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு -


அடுத்த 12 மாதங்களில் சுவிட்சர்லாந்திற்கு தொழிலாளர்களாக பணிக்கு வரும் பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை 1000-ஆக குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எனவே வரும் ஜூன் 2018 முதல் மே 2019 வரை பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த 996 பேருக்கு மட்டுமே சுவிட்சர்லாந்தில் புலம்பெயர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிலாளர் கட்டுப்பாடு நடவடிக்கையை போன்றே இதுவும் இருக்கும் என அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுவிட்சர்லாந்து ஏற்படுத்திகொண்ட ஒப்பந்ததின்படி ஒரு ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவிலான (இடஒதுக்கீடு) அகதிகளை சிவிட்சர்லாந்தில் புலம்பெயர அனுமதிக்க வேண்டும்.
ஆனால் பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டுகளுடன் உள்ள தடையில்லா புலம்பெயரும் திட்டத்தின் மூலம் அந்நாட்டில் இருந்து சுவிஸ்க்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
2016ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த தடையில்லா புலம்பெயரும் திட்டத்தின் மூலம் இதுவரை 3,300 பேர் பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இது 2015-யை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

தடையில்லா புலம்பெயரும் திட்டத்தினால் சுவிட்சர்லாந்தில் காலியாக இருக்கும் வேலைவாய்புக்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணிக்கையில் தொழிலாளர்கள் குவிகின்றனர்.
இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் எனவே பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டில் இருந்து புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுவதாக சுவிஸ் அமைச்சரவை விளக்கம் அளித்துள்ளது.
தற்போது வரை சுவிஸ்ஸில் 14,330 ருமேனியர்களும் 8,112 பல்கேரியர்களும் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு - Reviewed by Author on April 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.