அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கான பாதுகாப்பு செலவு எவ்வளவு .....


பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பாதுகாப்பிற்கு மட்டும் 6.35 மில்லியன் பவுண்ட் செலவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் Harry -Meghan Markle-க்கும் வரும் மே மாதம் 19-ஆம் திகதி Windsor-ல் உள்ள St George's Chapel தேவலாயத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000-க்கு மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிசார் தற்போது இருந்தே தீவிரம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் திருமணத்திற்கே தற்போது பாதுகாப்பு இவ்வளவு இருக்கும் போது, வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் அவர்களின் திருமணத்திற்கு பாதுகாப்பு எப்படி இருந்திருக்கும், அவர்கள் திருமணத்திற்கு பாதுகாப்பு செலவு எவ்வளவு என்பது குறித்த முதன் முறையாக வெளியாகியுள்ளது.
அதாவது Freedom of Information என்பதன் மூலம் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இதை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளவரசர் வில்லியம்ஸ்-கேட் மிடில்டன்னின் திருமணம் கடந்த 2011-ஆம் ஆண்டு நாடு முழுவதும் வெகு விமர்சியையாக நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு மட்டும் பாதுகாப்புக்காக 6.35 மில்லியன் பவுண்ட் செலவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2.8 மில்லியன் பவுண்ட் பொலிசார் ஓவர் டைம் பார்த்திற்காகவும், இதில் 3.6 மில்லியன் பவுண்ட்டை Home Office கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு சுமார் 7.2 மில்லியன் பவுண்ட் தான் செலவாகியிருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பிற்கு மட்டுமே 6.35 மில்லியன் செல்வாகியிருப்பதாக கூறப்படுவதால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பிரித்தானியாவில் கத்தி குத்துகளால் கொலை அதிகமாவதால், பொலிசார் அதை கட்டுபடுத்துவத்துவதற்கே திணறி வரும் நிலையில், வரும் மே மாதம் நடைபெறவுள்ள இவர்களின் திருமணத்திற்கு அதிக அளவு பொலிசார் தேவைப்படுவார்கள் என்பதால் பொலிசார் தவிர மற்ற படைகளின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கான பாதுகாப்பு செலவு எவ்வளவு ..... Reviewed by Author on May 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.