அமெரிக்கா அறிவிப்பு...கிம் ஜாங் உன் - ட்ரம்ப் சந்திப்பு ரத்து!
வருகின்ற ஜூன் 12ல் கிம் ஜாங்கை சிங்கப்பூரில் வைத்து சந்திக்க இருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இது வடகொரியாவுக்கு நன்மையாக என்றும் திட்டமிட்டபடி இந்த சந்திப்பு நிகழும் என்றும் ட்ரம்ப் தனது பக்கத்தில் கூறியிருந்தார்.
இதனிடையே வடகொரியா அதிபர் கிம் இந்த சந்திப்பை ரத்து செய்ய போவதாக கடந்த வாரமே அறிவித்திருந்தார். சீன அதிபர் ஸீ ஜின்னை சந்தித்த பிறகுதான் கிம் தனது எண்ணத்தை மாற்றி கொண்டதாக அமேரிக்கா கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த சந்திப்பு நடக்குமா நடக்காதா என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அமேரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அறிவிப்பு...கிம் ஜாங் உன் - ட்ரம்ப் சந்திப்பு ரத்து!
Reviewed by Author
on
May 25, 2018
Rating:
No comments:
Post a Comment