அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 4வது முறையாக நடைபெற்ற கம்பன் விழா-2018-படங்களுடன்

நடாத்துகின்ற கம்பன் விழாவானது இம்முறையும் 04காவது தடவையாக கம்பன்விழா இன்று 03-06-2018 காலை 10-00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வுகளாக மேளதாளவாத்திய இசை முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் மங்கள விளக்கேற்றல் அத்தோடு தமிழ்மொழிவாழ்த்துடன் நீலகண்டன் அரங்கில்
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கியமன்றத்தலைவர்
மகா ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் தலைமையில்
பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்-ஆய்வு போரசிரியர் முன்னிலையில்
  • திரு.S.குணபாலன்  மேலதிக அரசாங்க அதிபர்-மன்னார் மாவட்டம்
  • திரு.எம்.பரமதாசன் பிரதேச செயலாளர் மன்னார் நகரம்
  • திரு-K.S.வசந்தகுமார் பிரதேச செயலாளர-முசலி
  • திருமதி-கமலேஸ்வரி பிரதிப்பணிப்பாளர் கால்நடை சுகாதார திணைக்களம்
  • திருமதி.S.சுகந்தி செபஸ்ரியான் வலையக்கல்விப்பணிப்பாளர்-மன்னார்
  • திரு.ம.செல்வரெட்ணம்-பிரதம கணக்காளர்-மாவட்டசெயலகம்
  • திரு.S.S.இராமகிருஸ்ணன் இந்து மஹா சபை-மன்னார
  • வைத்திய கலாநிதி M.கதிர்காமநாதன்-இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர்
  • சட்டத்தரணி A.சபுறுதீன் தலைவர் RPR-நிறுவனம்-மன்னார்
  • அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லஸ்-அதிபர் மன்.பற்றிமா ம.வி-பேசாலை
  • திரு.T.தனேஸ்வரன்-அதிபர்-மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
  • ஜனாப் M.Y..மாஹிர்-அதிபர்-மன்.அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை
  • திரு.T.கோகிலராஜா அதிபர்-மன்.இலுப்பைக்கடவை அ.தக.பாடசாலை
  • திரு.S.செல்வரெட்ணம்-செல்வம் பிரதர்ஸ்
  • திரு.P.விஜயகுமார்-கெட்ஹவுஸ்-மன்னார்
  • திரு.S.சூரியபுத்திரன்-தர்மகத்தா-மளிகைப்பிட்டி
  • திரு A.ரெட்ணசிங்கம்-கலைமகள் கலாமன்றம்
  • திரு.K.நாகேந்திரன் -மதி ஒப்பந்தக்காரர் இவர்களுடன் மாணவர்கள் மாணவிகள் கலை கலாச்சார அதிகாரிகள் பொதுநிலையினர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளாக….
  • நடனம் 
  • பரதநாட்டியம் 
  • இசைநாடகம்
 இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்ற்தோடு 
சிறப்பு நிகழ்வாக
 காப்பிய நோக்கம் நிறைவேற துணை செய்தவர்கள் கூடிப்பிறந்த தம்பியரே….. கூடப்பிறந்த தம்பியரே…..  
வாதம் பிரதிவாதமாக சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான தமிழருவி தமிழ்மணி தமிழறிஞர் த.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு
கலைஞர்கள் கௌரவிப்பில் 05 மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட கவிதை தமிழ் இலக்கியத்திற்கு சேவையாற்றிய 03வருக்கு கவிச்சுடர் விருதும் சமய சமூகப்பணியாற்றியவர்களுக்கு கலாவிபூசணி-சமூகஜோதி-இசை இளம் பருதி விருதுகளும் அத்துடன் சிறப்பு விருதான கம்பன் புகழ் விருது தமிழுக்கும் சைவத்திற்கும் சமூகத்திற்கும் தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வரும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்-ஆய்வு போரசிரியர் அவர்களுக்கு கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் இணைந்து பொன்னாடை சந்தணமாலையும் விருதினையும் வழங்கி கௌரவப்படுத்தினர் நிகழ்வுகள் தமிழ்தாய்வாழ்த்துடன் இனிதே நிறைவுற்றது.

-வை.கஜேந்திரன்-























































































மன்னாரில் 4வது முறையாக நடைபெற்ற கம்பன் விழா-2018-படங்களுடன் Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.