அண்மைய செய்திகள்

recent
-

12 வயதில் ஜெர்மன் சென்று சாதனை படைத்த ஈழத்தமிழர் -

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் இளையோர்களில் பலர் பலதுறைகளில் சிறந்த திறமைசாலிகளாகவும், கலாநிதிகளாகவும் திகழ்ந்து தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்கள்.

அந்த வரிசையில் இலங்கையிலிருந்து ஜெர்மன் சென்று சாதணை படைத்த இருதய சத்திரசிகிச்சை நிபுணரான திரு. உமேஸ்வரன் அருணகிரிநாதனும் ஒருவராவார்.

ஜெர்மன் கம்பர்க் நகரில் பணிபுரியும் இருதய சத்திரசிகிச்சை நிபுணரும் வைத்தியகலாநிதியும், எழுத்தாளருமான திரு. உமேஸ் அருணகிரிநாதன் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12 வயதில் இலங்கையிலிருந்து வெளியேறி ஜெர்மன் சென்று அங்கு தனது மாமாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் போர்க்காலத்தில் இவரது சகோதரி நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதியின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் பெரும் கவலையடைந்த உமேஸ் அருணகிரிநாதன் தான் படித்து ஒரு வைத்தியராக வேண்டுமென்ற இலட்சியத்தை மனதில் வைத்து தற்போது உயர்ந்த இடத்தில் உள்ளார்.

அந்த வகையில் தனது இலட்சியத்தில் வெற்றியடைந்த இவர் அண்மையில் புத்தகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 வயதில் ஜெர்மன் சென்று சாதனை படைத்த ஈழத்தமிழர் - Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.