அண்மைய செய்திகள்

recent
-

புத்திசாலித்தனத்துடன் தொடர்புடைய புதிய ஜீன்கள் கண்டுபிடிப்பு -


ஒவ்வொருவரும் புத்திசாலித்தனத்துடன் செயலாற்றுவதற்கு காரணமாக மூளையிலுள்ள ஜீன்களே விளங்குகின்றன.

இவ்வாறான ஜீன்கள் 1,016 ஐ புதிதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியில் உள்ள Vrije பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் Danielle Posthuma என்பவரது தலைமையிலான குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக 14 வெவ்வேறு வயதுப் பிரிவினரைக் கொண்ட 270,000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நரம்பு புலனுணர்வு சோதனைக்கு இவர்கள் உட்படுத்தப்பட்டதுடன் அவர்களது DNA இலுள்ள ஒற்றை நியூக்ளியோடைட் பாலிமார்பிஸிஸ் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்திசாலித்தனத்துடன் தொடர்புடைய புதிய ஜீன்கள் கண்டுபிடிப்பு - Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.