அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்: வெறும் 4 டொலர் இழப்பீடு வழங்கிய நீதிமன்றம் -


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் துணை ஷெரிப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 4 டொலர் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணத்தின் செயிண்ட் லூசி கவுண்டி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Gregory Vaughn Hill Jr என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடியிருப்பில் இருந்து எழுந்த அதீத சத்தம் காரணமாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செயிண்ட் லூசி கவுண்டியின் துணை ஷெரிப் மேற்கொண்ட நடவடிக்கையில் கிரிகோரி வான் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

துணை ஷெரிப் மீது அவர் துப்பாக்கியை நீட்டி மிரட்டியதாலையே தற்பாதுகாப்பிற்காக சுட நேர்ந்தது எனவும் துணை ஷெரிப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தபோது கிரிகோரியின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடுவழங்கலாமா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து நடந்த சில மணி நேர விவாதத்திற்கு பின்னர் கிரிகோரியின் இறுதிச்சடங்கை நிறைவேற்ற அவரது தாயாருக்கு ஒரு டொலரும் கிரிகோரியின் 3 பிள்ளைகளுக்கு தலா ஒரு டொலரும் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டுமின்றி கிரிகோரியின் மரணத்திற்கு 99 விழுக்காடும் அவரே காரணம் எனவும், அதனால் ஒரு சதவிகித இழப்பீடு வழங்கினால் போதும் என ஷெரிப் அலுவலகம் நிரூபித்துள்ளது எனவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது மிகவும் கொடூரமான அவமானம் என தெரிவித்துள்ள கிரிகோரியின் குடும்பத்தார், இதுவும் ஒருவகை இனவெறி தாக்குதலே என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்: வெறும் 4 டொலர் இழப்பீடு வழங்கிய நீதிமன்றம் - Reviewed by Author on June 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.