அண்மைய செய்திகள்

recent
-

70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி -


இந்தியாவில் 70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி காற்றை மட்டும் சுவாசித்து வழும் துறவியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி. 88 வயதான இவர் மாதாஜி என அழைக்கப்படுகிறார்.
சிவப்பு உடை மட்டுமே பெரும்பாலும் அணியும் பழக்கம் கொண்ட இவர்
கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்து வருவதாகவும், இவரைப் பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது உண்மையா இல்லை பொய்யா என்பதை அறிந்து கொள்வதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ. மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து இவரை கண்காணித்தனர்.
அதன்படி, ஒரு தனி அறையில், இவரை 15 நாட்கள் தங்க வைத்து தீவிரமாக கண்காணித்தனர்.
அதன் பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட போது, அவர் பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் அருளால் தியானத்தின் வாயிலாக தனக்கு சக்தி கிடைப்பதாக கூறியுள்ளார்.
இவருடைய ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சென்று ஆசி பெற்று வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.
70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி - Reviewed by Author on June 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.