அண்மைய செய்திகள்

recent
-

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்ட முறை -


உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக Var எனப்படும் வீடியோ உதவி நடுவர் முறை, பிரான்ஸ்-அவுஸ்திரேலியா இடையேயான போட்டியில் பயன்படுத்தப்பட்டது.

கால்பந்து போட்டிகளில் கோல்கள் அடிப்பதில் பிரச்சனைகள், பந்து கோட்டை விட்டு வெளியேறுதல் போன்றவற்றை துல்லியமாக கணித்து முடிவைக் கூற முடியாமல் இருந்து வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில், இந்த உலகக் கிண்ண போட்டி தொடரில் Var எனப்படும் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை முதன்முறையாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா போட்டியின்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன்,கோல் கம்ப பகுதியில் எதிரணை வீரரால் தடுக்கப்பட்டு கீழே விழுந்தார்.
ஆனால், நடுவர் அதற்கு Spot kick தரவில்லை. அதன் பின்னர், Var முறையின் படி வீடியோவில் ஆய்வு செய்து பெனால்டி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கிரீஸ்மன், அதனை கோலாக்கினார். இதன் மூலம், உலகக் கிண்ண கால்பந்து தொடரில் Var உதவியுடன் அடிக்கப்பட்ட முதல் கோல் இதுவாகும்.
கடந்த 1986ஆம் ஆண்டு அர்ஜெண்டினா வீரர் மாரடோனா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அடித்த கோல் கையால் தள்ளப்பட்டது என கூறப்பட்டது. இது அச்சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது கடவுளின் கையால் அடிக்கப்பட்ட கோல் என மாரடோனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


David Vincent/AP

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்ட முறை - Reviewed by Author on June 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.