அண்மைய செய்திகள்

recent
-

தெற்காசியாவில் வறுமை குறைந்த நாடாக இலங்கை -


தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு இலங்கையாகும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டில் ஆறு தசம் 7 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை மட்டம் தற்சமயம் நான்கு தசம் 4 சதவீதம் வரை குறைவடைந்திருக்கின்றது.
நிலைபேறானா அபிவிருத்தி இலக்கின் கீழ் 2030ஆம் ஆண்டளவில் நாட்டில் இருந்து வறுமையை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார். தொடர்ந்தும் பேசிய அவர்,
சமுர்த்தி வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்து கொள்ள முடியவில்லை. வறுமை அரசியல் வாதிகளின் ஆயுதமாக மாறியிருக்கின்றமை இதற்கான காரணமாகும்.

சமுர்த்தி அலுவலகம் அரசியல் வாதிகளின் அலுவலமாக மாறியிருக்கின்றது. சமுர்த்தி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தெற்காசியாவில் வறுமை குறைந்த நாடாக இலங்கை - Reviewed by Author on June 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.