அண்மைய செய்திகள்

recent
-

12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பிரான்ஸ்: பெல்ஜியத்தை வீழ்த்தி அபாரம் -


உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்.
1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன.

தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கிண்ணத்தை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜேர்மனி ஆகிய நாடுகள் கிண்ணத்தை வென்றன.
அரை இறுதியில் விளையாடும் பிரான்ஸ் 1998ல் கிண்ணத்தை வென்றது. இங்கிலாந்து 1966ல் கிண்ணத்தை வென்றுள்ளது.
எஞ்சிய இரு அணிகளும் முதல் முறையாக கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் உள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது.

இந்த உலகக் கிண்ணம் தொடரில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது.
நாக் அவுட் சுற்றில், கிண்ணத்தை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது. 6வது முறையாக உலகக் கிண்ணம் அரை இறுதியில் பங்கேற்கும் பிரான்ஸ், 1998ல் கிண்ணத்தை வென்றது.
ஆனால் கடந்த உலகக் கிண்ணம் தொடரில் காலிறுதியில் வெளியேறியது.

இந்த உலகக் கிண்ணம் தொடரில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது.
ஜி பிரிவில் பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது.
காலிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரேசிலை 2-1 என வென்றது. தற்போது 13வது உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது.
கடந்த உலகக் கிண்ணம் தொடரில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது.

இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை என்றபோதும், மிகவும் வலுவான அணியாக பெல்ஜியம் உள்ளது.
கால் இறுதியில் மிகவும் வலுவான, கிண்ணத்தை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்பட்ட பிரேசிலை வென்று அசத்தியது பெல்ஜியம்.
கடைசியாக விளையாடிய 24 ஆட்டங்களில் பெல்ஜியம் ஒன்றில் கூட தோல்வியடையவில்லை. 19ல் வென்றுள்ளது, 5ல் டிரா செய்துள்ளது. கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.
இன்று நடந்த அரை இறுதியில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கமே இருந்தது. பெரும்பாலான நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது.
முதலில் இரு அணிகளும் நிதானமாக, எதிரணிக்கு வாய்ப்பு அளிக்காமல் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி 0-0 என முடிந்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிரீஸ்மான் கடத்தி கொண்டு வந்து கொடுத்த பந்தை கோலாக்கினார் உம்டிடி.
இதன் மூலம் 1-0 என பிரான்ஸ் வென்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. 2006ல் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது பிரான்ஸ்.







12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பிரான்ஸ்: பெல்ஜியத்தை வீழ்த்தி அபாரம் - Reviewed by Author on July 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.