14 வயதில் 237 கிலோ எடை: அறுவை சிகிச்சை மூலம் எடை குறைப்பு -
2003-ம் ஆண்டு மிஹிர் பிறக்கும்போது, 2.5 கிலோ எடை இருந்துள்ளார். மிஹிரின் குடும்பம் பாரம்பரியமாக சற்று உடல் எடை கொண்டது.
இதனால் 5 வயதுக்கு மேல் அதிகமாக சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக துரித உணவுகளை சாப்பிட்ட காரணத்தால், 14 வயதில் 237 கிலோ எடையை தொட்டார். இதனால் கண்ணை விழித்து பார்க்க முடியாத அளவிற்கு முகம், கழுத்து, தொடை, கை கால்கள் என எல்லா பகுதிகளிலும் சதை கூடியது.
படிக்க வேண்டிய காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலையும் ஏற்பட்டது. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அறுவை சிகிச்சை நடந்து உடல் எடை குறைக்கப்பட்டது. 3 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், அவரது எடை 165 கிலோவாக குறைக்கப்பட்டது.
மேலும் அறுவை சிகிச்சை மூலம் அவரது இறைப்பையின் அளவு குறைக்கப்பட்டது. எனினும் 161 செ.மீ உயரம் கொண்ட மிஹிரின் எடை 90 கிலோவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவகையில் உணவு மற்றும், பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
வெறும் பானங்களை மட்டுமே குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். தேவைப்பட்டால் புரோட்டீன் மட்டும் கொண்ட, கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் சிலவற்றை பரிந்துரைத்துள்ளனர்.
14 வயதில் 237 கிலோ எடை: அறுவை சிகிச்சை மூலம் எடை குறைப்பு -
Reviewed by Author
on
July 06, 2018
Rating:
No comments:
Post a Comment