அண்மைய செய்திகள்

recent
-

முட்டை தினமும் சாப்பிடலாமா...


பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. சிலர் மஞ்சள் கருவை தவிர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்றும், சிலர் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று கூறுகின்றனர்.
பல்வேறு விவாதங்களின் முடிவுக்கு பின்னர், நாம் அறிந்து கொள்வது மஞ்சள் கரு தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது. இதனால் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • முட்டையில் அதிகப்படியான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு முட்டையில் 185 மி.கி அளவிற்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் கொழுப்பின் அளவின் அதிகரிப்பது, உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பே ஆகும். உணவில் இருக்கும் சாதாரண கொழுப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
  • கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதிலிருக்கும் கொழுப்பு பிரிந்து முழு மூலக்கூறாக உட்கிரகிக்கப்படாது. அதேசமயம் நிறைவுற்ற கொழுப்பு சிறிய, சிறிய கொழுப்பு அமிலங்களாக பிரிந்து, உடல் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
  • இதய ஆரோக்கியத்திற்கும், ஒரு நாளிற்கு ஒரு முட்டை உண்பதற்கும் இடையேயான தொடர்பை, ஆராய்ச்சிகளும், படிப்பினைகளும் கண்டறிய தவறிவிட்டன. இதில் மரபியல் ரீதியாக இதய பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் விதிவிலக்கல்ல.
  • முட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் நீண்ட பட்டியலாக இருக்கிறது. முட்டையில் விட்டமின் இ, போலேட், செலினியம், லுடெய்ன், புரோட்டீன், மினரல்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் மூளை ஆரோக்கியம், பார்வை, நோய் எதிர்ப்பு ஆகியவற்றிற்கு பெரிதும் உதவுகின்றன.

  • வேக வைத்த முட்டைகள் மிக ஆரோக்கிய உணவாகும். இதனுடன் வேறு எதையும் சேர்த்து உண்ண வேண்டிய அவசியமில்லை. வேக வைத்த முட்டைகள் பிடிக்க வில்லை எனில், நான் - ஸ்டிக் பேனில் ஆரோக்கியமான எண்ணெயை இட்டு, முட்டையை சமைத்து உண்ணலாம்.
  •  
முட்டை தினமும் சாப்பிடலாமா... Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.