அண்மைய செய்திகள்

recent
-

உலகக் கிண்ணத்தில் விழுந்த ஒரு கோல்: ஹைதி அரசு கவிழ காரணமானது -


கரீபியன் நடானா ஹைதியில் மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஜேக் கய் லபோன்டன்ட் பதவியில் இருந்து விலகினார்.
உலகக் கிண்ணம் தொடரில் பெல்ஜியத்தின் கெவின் டி புருனே அடித்த ஒரு கோலுக்கும் ஹைதி பிரதமரின் இந்த முடிவுக்கும் தொடர்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

21-வது ஃபிபா உலகக் கிண்ணம் போட்டிகள் ரஷ்யாவில் நடந்து முடிந்துள்ளன. இதில் இறுதிப்போட்டியில் குரேஷியாவை வென்று பிரான்ஸ் கிண்ணத்தை வென்றது.

கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ள கரீபியன் நாடான ஹைதி, உலகக் கிண்ணம் தொடருக்கு தகுதிப் பெறவில்லை.
அதே நேரத்தில் அந்த நாட்டு ரசிகர்கள் பிரேசில் அணிக்கு ஆதரவாக இருந்தனர். பிரேசில் விளையாடும் போட்டி என்றால், போட்டது போட்டபடியே விட்டுவிட்டு அதை பார்க்க உட்கார்ந்து விடுவார்கள்.
கடந்த 6ம் திகதி இரவு, கால் இறுதியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இரு அணிகளும் கோலடித்து சம நிலையில் இருந்தன.

இந்தப் போட்டி நடக்கும் அதே நேரத்தில்தான், பெட்ரோல், டீசல், காஸ் விலையை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்தும் அறிவிப்பை ஹைதியின் பிரதமர் ஜேக் கய் லயோன்டன்ட் வெளியிட்டார்.
கால் இறுதியில் பிரேசில் வென்றுவிடும், அதன்பிறகு அரை இறுதியில் விளையாடும். இதனால் மக்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். இந்த நேரத்தில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டால் மிகப் பெரிய பிரச்னை வராது என்று அரசு நினைத்தது.
ஆனால், பெல்ஜியத்தின் கெவின் டி புருனே ஒரு கோலடிக்க பிரேசிலை பெல்ஜியம் வென்றது.

இதனால் ஹைதி மக்கள் வெறுத்து போயினர். அந்த நேரத்தில் விலை உயர்வு அறிவிப்பும் வெளியானது. உடனே போராட்டங்கள் துவங்கின.
கடந்த ஒருவாரமாக அங்கு தீவிரமாக நடந்த போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியில் இருந்து லயோன்டன்ட் விலகினார். ஒரு கோலால், ஒரு அரசு கவிழ்ந்தது.
உலகக் கிண்ணத்தில் விழுந்த ஒரு கோல்: ஹைதி அரசு கவிழ காரணமானது - Reviewed by Author on July 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.