அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் இலவச மருத்துவ முகாம்-படங்கள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறியுள்ள மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(14) காலை விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி ம.வி பாடசாலையில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை குறித்த விசே மருத்துவ முகாம் இடம் பெற்றது.

-இதன் போது வைத்தியர்களின் இலவச வைத்திய பரிசோதனைகள் இடம் பெற்றதோடு,இலவசமாக மருந்து பொருட்களும் வழங்கப்பட்டது.மேலும் தேவைப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளுக்கு அமைவாக அலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

-குறித்த இலவச வைத்திய முகாமில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி,கீரிச்சுட்டான்,மு ள்ளிக்குளம்,தச்சனா மருதமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,கர் ப்பிணித்தாய்மார்கள்,சிறுவர்கள் உற்பட சுமார் 200 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயண் பெற்றுள்ளனர்.

 மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குறித்த கிராம மக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து தற்போது மீள் குடியேறி பல வருடங்களாகியுள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 












வடக்கு சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் இலவச மருத்துவ முகாம்-படங்கள் Reviewed by Author on July 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.