அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பம்-(படம்)

மன்னார் நகர நுழைவாயிலில்  உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று   (2) திங்கட்கிழமை 25 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்,விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இவர்களுடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு அகழ்வு மேற்கொண்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழுமையான  மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றது.

அகழ்வு பணிகளின் போது கிடைக்க பெற்ற சில  மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று சொருதிய நிலையில் காணப்படுவதனாலும், மனித எச்சங்களை அப்புறப்படுத்தமால் அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்கனவே கிடைத்த மனித எச்சங்கள் சிதைவடைய வாய்ப்புகள் இருப்பதனாலும் இதுவரை கிடைத்த அனைத்து மனித எச்சங்களையும் அப்புறபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அனைத்து மனித எச்சங்களும் சட்ட ரீதியாக அகற்றப்பட்டு நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு முழு அகழ்வு பணிகளும் நிறைவடைந்த பின்னர் உடற் கூற்று பரிசேதனைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மேற்படி வளாகத்தை அகலப்படுத்தி அகழ்வு செய்வதற்கான செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது அதற்காக குறித்த வளாகத்தின் முகப்பு பகுதிகள் தொண்டப்படுகின்ற  நிலையில் முகப்பு பகுதியிலும் முழு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(மன்னார் நிருபர்)




மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பம்-(படம்) Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.