அண்மைய செய்திகள்

recent
-

உல்லாசமாக இருந்த செலவையும் மாகாணசபையிடம் கேட்ட டெனீஸ்வரன்… அதிகாரிகளிற்கு தடைபோட்ட பிரதம செயலாளர்:

பா.டெனீஸ்வரனின் நடவடிக்கைகளால் மாகாணசபையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. மாகாணசபை அதிகாரிகளையும் குழப்பி, நிர்வாகத்தையும் குழப்பும் அவரது நடவடிக்கைகளால் அதிகாரிகள் இன்று பெரும் சிக்கலை எதிர்கொண்டனர்.

வடமாகாணசபை நடவடிக்கைகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய- முதலமைச்சர் எதிர்ப்பு அணியாகிய தமிழரசுக்கட்சி அணியின்- பின்னணியிலேயே டெனீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்தார் என வலுவாக நம்பும் விதமான சம்பவங்களே நடந்து வருகின்றன.

முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக-முதலமைச்சருக்கு எதிராக செயற்படும் தமிழரசுக்கட்சி அணி டெனீஸ்வரனை பயன்படுத்தியுள்ளது. பொறுப்பான அரசியல் செயற்பாட்டாளர்கள் யாருமே மாகாணசபையை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் டெனீஸ்வரன்- வடமாகாணசபையை குழப்பியே தீர வேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருவது தெளிவாகிறது.

சில  தினங்கள் முன்  தனது அமைச்சின் கீழுள்ள அதிகாரிகளை மன்னாரில் சந்திப்பிற்காக டெனீஸ்வரன் அழைத்திருந்தார். ஆனால், அதிகாரிகள் கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லையென்ற தகவலை ஏற்கனவே தமிழ் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம். அது தொடர்பான மேலதிக சில தகவல்களை இப்பொழுது வெளிப்படுத்துகிறோம்.

டெனீஸ்வரனின் அறிவித்தலையடுத்து, அவரது அமைச்சின் கீழுள்ள அதிகாரிகள் வடமாகாண பிரதம செயலாளரை இன்று காலையில் சந்தித்தனர். டெனீஸ்வரனின் அறிவித்தலை குறிப்பிட்டு, மன்னாருக்கு செல்ல அனுமதி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், இந்த கோரிக்கையை பிரதம செயலாளர் மறுத்து விட்டார். உங்களது அமைச்சின் செயலாளர்களிடம் அனுமதி பெற்று செல்லுங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.


பின்னர், அதிகாரிகள் டெனீஸ்வரனின் குழப்ப நடவடிக்கைகள் தொடர்பாக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழ்பக்கத்துடன் பேசிய திணைக்கள தலைவர் ஒருவர் கடும் தொனியில் சீறி விழுந்தார். “தமது எதிரியான முதலமைச்சருக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென்பதற்காக, இனத்தின் இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லையென்ற ரீதியில் டெனீஸ்வரன் செயற்படுகிறார். மன்னாரில் அவர் “ஆக திரிந்தவரை ரெலோ அரசியலுக்கு கொண்டு வந்து தவறிழைத்து விட்டது. அவர் இப்பொழுதும் அடித்துக் கொண்டுதான் திரிகிறார். அவருக்கு போராட்ட வரலாறும் தெரியாது. உணர்வும் கிடையாது. பதவிக்காக எதுவும் செய்வார்“ என சீறி விழுந்தார்.

அத்துடன், இன்னொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார்.

மாகாணசபையில் குழப்பங்கள் வர முன்னர்- டெனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக இருந்த சமயத்தில்- நடந்த சம்பவம் அது. தனது குடும்பத்துடன் கொழும்பிற்கு விடுமுறையை கழிக்க சென்ற டெனீஸ்வரன், அங்கு நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்தார்.


பின்னர் அந்த செலவிற்கான பற்றுச்சீட்டுக்களை மாகாணசபையில் ஒப்படைத்து அதற்கு பணம் வழங்க வேண்டுமென அடம்பிடித்துள்ளார். மத்திய அமைச்சர்களிற்கு இப்படியான சலுகையுள்ளது, அதை எமக்கும் தர வேண்டுமென டெனீஸ்வரன் அடம்பிடித்தார். இது சிறிதுகாலம் சர்ச்சையாக நீடித்தது. பின்னர், அந்த பணத்தை வழங்க முடியாதென மாகாணசபை நிர்வாகம் மறுத்தது என்ற தகவலையும் தந்தார்.


-செய்திமூலம் -தமிழ்பக்கம்-

உல்லாசமாக இருந்த செலவையும் மாகாணசபையிடம் கேட்ட டெனீஸ்வரன்… அதிகாரிகளிற்கு தடைபோட்ட பிரதம செயலாளர்: Reviewed by Author on July 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.