அண்மைய செய்திகள்

recent
-

போராட்ட காலத்தில் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தனது கடமையின் நிமித்தம் உயிர் நீத்த ஆசிரியர்கள் நினைவு கூறப்பட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்MP


கல்வி சமூகம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளிலே முதலில் போராட்ட காலத்திலே கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தனது கடமையின் நிமித்தம் சென்று உயிர் நீத்த எமது ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்பே இவ்வாறான  நிகழ்வுகளை ஆரம்பிப்பது சாலச் சிறந்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மடு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(14) மாலை கருங்கண்டல் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் ம.வி பாடசாலையில்,மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் தலைமையில் இடம் பெற்றது.

-இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

ஆசிரியர் சமூகம் என்பது ஒரு தியாகத்தை கொண்டிருக்கின்ற சமூகம்.அவர்களுடைய வாழ்க்கை என்பது பணிக்கப்பட்ட ஒவ்வரு பாடசாலைகளிலும் தமது பிரச்சினைகளை ஒரு பக்கம் வைத்து விட்டு தக்களிடம் ஒப்படைக்கப்பட்ட,தமது பிள்ளைகளாக கருதப்படுகின்ற அந்த செல்வங்களை சாதனை படைக்கின்ற அளவிற்கு கொண்டு வருகின்ற செயலைச் செய்வதுதான் எங்களுடைய ஆசிரியர் சமூகம்.

போராட்ட கலாத்திலே இந்த கல்விக்காக, கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தனது கடமையின் நிமித்தம் சென்ற போது உயிர் நீத்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தி  இப்படியான நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இன்றைக்கு கல்வி என்பது தான் எங்களுடைய தேசத்திலே நிமிர்ந்து நிற்கின்ற ஒரு விடையமாக இருக்கின்றது.

-உயிர்களை இழந்தோம்,உடமைகளை இழந்தோம்,எல்லாவற்றையும் இழந்தோம்.ஆனால் கல்வி ஒன்று தான் மிஞ்சியுள்ளது.இந்த பாடசாலை நகர்ந்து நகர்ந்து மரங்களுக்கு கீழும்,பாரிய வெப்பத்தின் மத்தியிலும் தொடர்ச்சியாக பாடசாலை நகர்ந்து சென்று தனது கற்றல் செயற்பாட்டை  மேற்கொண்டுள்ளது என்று சொன்னால் அது எமது ஆசிரியர்களின் சேவை என்றே கூற முடியும்.அந்த வகையிலே மாணவச் செல்வங்கள் நீங்கள் ஆசிரியர்களுக்கும்,பெற்றோருக்கும் , பாடசாலைக்கும் பெறுமை சேர்க்க வேண்டும்.

 இன்றைக்கு நீங்கள் செய்த சாதனை     ஆசிரியர் சமூகத்திற்கும், உங்களுடைய பெற்றோர்களும் மகிழ்கின்ற அறிய சாதனையை நீங்கள் நிகழ்த்தியுள்ளீர்கள்.

-எமது பெற்றோர்கள் எங்களுக்காக உழைக்கின்றனர்.தங்களை உருக்கின்றார்கள்.கஸ்டம் துன்பங்கள் எல்லாம் என்னோடு போய் விடட்டும்.என் பிள்ளைகளை தொடரக்கூடாது என்ற நிலையில் எமது பெற்றோர் செயற்படுகின்றனர்.

-ஆகவே அவர்களை கடைசி நேரம் விரைக்கும் நாங்கள் பார்க்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.
அதே போல் அவர்கள் நினைக்கின்ற,கஸ்டப்படுகின்ற எனது பிள்ளை எதிர்காலத்தில் கஸ்டப்படக்கூடாது என நினைக்கின்ற தன்மையை நீங்கள் கல்வியின் ஊடாக உண்டு பண்ணி உங்களுடைய சொந்தக்காலிலே நிற்பதற்கான வழிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது பெற்றோர்களின் எதிர் பார்ப்பு
.
இன்றைய காலகட்டத்தில் சிலர் தமது சொந்தக்காலிலே,வசதியாக இருக்கின்ற போது தமது பெற்றோர்களின் அருமையை புறிந்து கொள்ளுவதில்லை.எனினும் எமது பிரதேசங்களில் அவ்வாறான நிலை இல்லை.

நகர் புறங்களிலே அப்பா, அம்மாவை கொண்டு சென்று இல்லங்களிலே சேர்த்து விடுகின்றனர். அவர்கள் அங்கே பல்வேறு மன அலுத்தங்களுக்கு மத்தியிலே தமது இறுதி வாழ்நாள் வரை அங்கே இருக்கின்றார்கள்
.
-எனது பிள்ளை என்னை கை விட்டு விட்டதே,எனது பேரப்பிள்ளை என்னை கை விட்டு விட்டதே என அவர்கள் நினைக்கின்ற போது அவர்களின் சாபம் எங்களை நல்ல நிலையில் வாழ விடாது.எனவே ஆசிரியர் சமூகம் என்றைக்கும் இறைவனால் ஆசிர் வதிக்கப்பட்டுள்ள ஒரு சமூகம்.எனவே அவர்களின் சந்ததிகளான மாணவச் செல்வங்களாகிய நீங்களும் ஆசிர் வதிக்கப்பட்டவர்கலே.உங்களின் எதிர்காலம் சிறப்பிக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.



போராட்ட காலத்தில் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தனது கடமையின் நிமித்தம் உயிர் நீத்த ஆசிரியர்கள் நினைவு கூறப்பட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்MP Reviewed by Author on July 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.