அண்மைய செய்திகள்

recent
-

நிலநடுக்கத்தால் சிக்கித்தவிக்கும்100க்கணக்கானோர்: மீட்க முடியாமல் .....


இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய 560 பேர் தற்போதும் மலைப்பிரதேசத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தலமான லோம்பக் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போதும் சுமார் 560 பேர் தவித்து வருகின்றன்றனர்.
கடந்த ஞாயிறு அன்று ரிக்டர் அலகில் 6.4 என பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் கொல்லப்பட்டனர்.
160-கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதில் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கத்தை அடுத்து மலைப்பிரதேசங்களில் தஞ்சமடைந்த சுமார் 560 பேர் வெளிவர முடியாமல் தற்போதும் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு குழுவினருக்கு சிக்கித்தவிக்கும் பொதுமக்களை காப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிற்து.
இதில் பெரும்பாலும் மலையேறும் சுற்றுலாப்பயணிகள் எனவும், சாலைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் ஹெலிகொப்டர் பயன்படுத்தி மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நிலநடுக்கத்தால் சிக்கித்தவிக்கும்100க்கணக்கானோர்: மீட்க முடியாமல் ..... Reviewed by Author on August 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.