அண்மைய செய்திகள்

recent
-

GIS இன் வரலாறு (GIS-01)


GIS இன்விரிவாக்கம் Geographic Information System என்பதாகும். அதாவது Geographic– புவியியல் (சார்ந்த), Information – தகவல் , System– தொகுதி அல்லது முறைமை என்றவாறுஅதனுடைய மொழிபெயர்ப்பு அமைகின்றது. இதற்கமைய புவியியல் தகவல் தொகுதி, புவியியல்தகவல் முறைமை என தமிழில்அழைக்கப்படுகின்றது.

· General Defination :- A geographic information system (GIS) is a computer-based tool for mapping and analyzing spatial data. ( GIS எனப்படுவது ' படம் வரைதல் மற்றும்இடம் சார்ந்த தரவுகளின் பகுப்பாய்வுஎன்பவற்றை மேற்கொள்வதற்கான கணனியை அடிப்படையாகக் கொண்டஒரு கருவி அல்லது தொகுதி ' எனபொதுவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.)

· ESRI (Environmental Systems Research Institute) - A geographic information system (GIS) integrates hardware, software, and data for capturing, managing, analyzing, and displaying all forms of geographically referenced information. ( GIS எனப்படுவது புவிசார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளுதல், முகாமைசெய்தல், பகுப்பாய்வு செய்தல், காட்சிப்படுத்தல் ஆகியவற்றைமேற்கொள்வதற்கான ஒரு ஒருங்கிணைக்கக்கப்பட்ட கணனிமயப்படுத்தப்பட்ட தொகுதி ஆகும்.)

· USGS (U.S. Geological Survey) - A GIS is a computer system capable of capturing, storing, analyzing, and displaying geographically referenced information . ( GIS எனப்படுவது புவிசார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளுதல், சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், காட்சிப்படுத்தல் ஆகியதிறன்களைக் கொண்ட ஒரு கணனிமயப்படுத்தப்பட்ட தொகுதி ஆகும்.)

GIS இன் வரலாறு (History of GIS)
புஐளுஇன் வளர்ச்சியினை அவதானிக்கின்றபோது 1960 களின் முற்பகுதியில் அணுஆயுதஆராய்ச்சி உத்வேகம் பெற்றதனால் ஏற்பட்ட கணனி வன்பொருள்வளர்ச்சிகள் படவரைகலையியலின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
1960 ஆம் அண்டில்கனடாவின் காடு மற்றும் கிராமஅபிவிருத்தி தினைக்களமானது உலகில் முதன்முதலாக GISநுட்பத்தை செயற்படுத்தி காட்டியது.
இந்தGIS நுட்பமானது கனடா புவியியல் தொகுதி(Canada Geographic Information System - CGIS) என அழைக்கப்பட்டதுடன், இதனைகலாநிதி. றொகர் தொம்லின்சன் (Dr. Roger Tomlinson) என்பவரால்உருவாக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டில்கவாட் ரி. பிசர் (Howard T. Fisher) என்பவர் கணனி வரைகலைமற்றும் இடம்சார்ந்த பகுப்பாய்வுகளுக்குமான ஆய்வுகூடமொன்றை உருவாக்கினார்.

1977 இல் மேற்கத்தேயசக்தி மற்றும் நிலப்யன்பாட்டு குழுவினதும்அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்குசேவை அமைப்பினதும் மேற்பார்வையில் போhட் கொலின்ஸ்(Fort Collins) எனுமிடத்தில் வரைபடமேற்பரப்பு மற்றும் புள்ளியில் தொகுதி (The Map Overlay and Statistical System - MOSS) செயற்றிட்டம்ஆரம்பிக்கப்பட்டது.
1981 களில் அமெரிக்காவின் ESRI என்னும்நிறுவனம் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தக்கூடியளவுக்கு GIS மென்பொருட்களைவடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
1982 இல் ஐக்கியஅமெரிக்காவின் பொறியில் ஆராய்சி ஆய்வுகூட இராணுவத்துறையானதுநிலமுகாமைத்துவம் மற்றும் சூழல் திட்டமிடல்என்பவற்றுக்காக GRASS GIS எனும் மென்பொருளைதயாரித்தது.
1987 இல் முதன்முதலாகESRI நிறுவனமானதுARC INFO எனும்மென்பொருளினை வெளியிட்டது.

1990 களின் பின்னர்பல மென்பொருட்கள் GISநுட்பத்திற்காக வெளிவந்ததுடன், GISஇன் வளாச்சியும் உலகில் பரவத்தொடங்கியது.
1999 இல் ESRI நிறுவனமானது முதன்முதலாக GIS தினத்தை தேசியபுவியில் சமூகம் எனும் அமைப்புடன்இணைந்து நடாத்தியது.
GISதினமானது வருடத்தில் நவம்பர் மாதத்தின் மூன்றாவதுவாரத்தில் கொண்டாடப்படுகின்றது.

GIS இன் வரலாறு (GIS-01) Reviewed by Author on August 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.