அண்மைய செய்திகள்

recent
-

நல் நிலைக்கான பயணத்தில் உணர்வெழுச்சியுடன் பங்குகொண்ட மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்


இலங்கை குடும்ப புனர்வாழ்வு நிறுவனத்தினால் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கடந்த 21.08.2018 அன்று காலை 8.30 மணியளவில் நன் நிலைக்கான பயணம் என்கின்ற தலைப்பில் நிகழ்வு ஆரம்பமானது.

இந் நிகழ்வில் வட மாகாண கௌரவ முதல் அமைச்சர் C.V..விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சுகாதார அமைச்சர் DR.குணசீலன்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  நகர தவிசாளர் அரசாங்க ஊளியர்கள் தனியார் நிறுவனங்களின் ஊளியர்கள் சர்வ மத அமைப்பினர் மீனவ சுட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் போக்கு வரத்துச் சங்க ஊளியர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வு தொடங்கிய நாளில் இருந்து இப் பயணத்தில் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளர்இ சிறுநாவற்குளம்- உயிலங்குளம்- உயிர்த்தராசன்குளம்-செம்மண்தீவு- முருங்கன்பிட்டி இசைமானைத்தாழ்வு-தம்பனைக்குளம் போன்ற கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உணர்வெழுச்சியுடன் இப் பயணத்தில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் (FRC) ஊளியர்களுடன் பங்கு கொண்டிருந்தனர். இவர்களுக்கும் குடும்ப புனர்வாழ்வு நிலைய ஊளியர்களினால் இப் பயணத்தின் நோக்கங்கள் மற்றும் இன்றைய காலத்தில் உளவளத்துணையின் தேவை பற்றிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப் பயணமானது 3வது நாளைக் கடந்து பல இடங்களில் விழிப்புணர்வுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நல் நிலைக்கான பயணத்தின் முதல் கட்ட நிகழ்வின் இறுதி நிகழ்வானது 26.08.2018 அன்று காலை 11 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்துடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 







நல் நிலைக்கான பயணத்தில் உணர்வெழுச்சியுடன் பங்குகொண்ட மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் Reviewed by Author on August 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.