அண்மைய செய்திகள்

recent
-

இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்


ஒரு பாவகாரியத்தை ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பது தான் சாபம் ஆகும்.
முன்னோர்கள் சாபங்களை மொத்த‍மாக 13 வகையான வகைப்படுத்தியுள்ளனர். அவை என்ன என்பதை பார்ப்போம்.
பெண் சாபம்
இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவ ரை இழிவாகப் பேசு வதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்க ளை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டிய வர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற் படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டா கும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திரு மணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத் துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலா ரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந் தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன் றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம்
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக் காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற் படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனை யை க் கொடுக்கும்.
கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோ ண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்
பச்சை மரத்தைவெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவி னர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களை யும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களு க்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம்
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்கா மல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள் Reviewed by Author on August 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.