அண்மைய செய்திகள்

recent
-

மெக்சிக்கோவில் மாயா இனத் தலைவனின் முக உருவம் கண்டுபிடிப்பு -


மெக்சிக்கோவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் அரியவகை பொக்கிஷம் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தனர்.

பலன்கே மாளிகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்த இம் முகமூடி மெஸோ அமெரிக்காவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான K'inich Janaab Pakal இனைப் பிரதிபலிப்பதாக தெரியவருகிறது.

அமெரிக்க வரலாற்றில் இவரது ஆட்சியானது மிக நீண்ட காலத்திற்கு ஓங்கியிருந்தது.
இவர் தனது 12 ஆவது வயதில் ஆட்சி அரியணையில் ஏறியிருந்தார்.

அவர் 80 ஆம் வயதில் தான் இறக்கும் வரை சுமார் 68 வருடங்கள் ஆட்சிபுரிந்திருந்தார்.

இவரே தற்போதுள்ள கட்டடக் கலைக்கு அக்காலத்திலேயே வித்திட்டவர்.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த முகமூடியானது House E எனப்படும் கட்டடத் தொகுதியிலிருந்து கண்டபிடிக்கப்பட்டிருந்தது.

இதுவே Pakal அரியணை ஏறியிருந்த இடம் எனவும் சொல்லப்படுகிறது.
இதில் காணப்பட்டிருந்த பல உருக்களை கவனமாக அவதானித்த போது இந்த உருவம் Pakal இனுடையதுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மெக்சிக்கோவில் மாயா இனத் தலைவனின் முக உருவம் கண்டுபிடிப்பு - Reviewed by Author on September 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.