அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உயர்கல்விக்கான வாய்ப்பு....இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மன்னார் கற்கை நிலையம்


இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மன்னார் கற்கை நிலையம்
பட்டமேற் கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம (PGDE)- 2018/2019

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தினால் 2018/2019 ஆம் ஆண்டுக்கான பட்டமேற் கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்துக்கு விண்ணப்ப படிவங்கள் கீழ்கண்ட தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மன்னார் கற்கை நிலையத்திற்கும்  மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சித்திட்டம் :- பட்டமேற் கல்வி டிப்ளோமா நிகழ்சித்திட்டம் 15 மாத கால அளவைக்        கொண்டதாகும்.
அனுமதித் தேவைகள் விண்ணப்பதாரிகள்-

1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் குறைந்தது மூன்று (03) வருட காலத்தைக் கொண்ட இளமாணிப்பட்டம் பெற்ற பட்டதாரியாக அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதற்குச் சமமான தகைமைகள் உடையவராகவும்.

2. அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் சேவையிலுள்ள ஆசிரியராக-அதிபராக-ஆசிரியஆலோசகராக அல்லது ஆசிரியர் கல்வியியலாளராக அல்லது இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தராக அல்லது முழுநேர விரிவுரையாளராக (பல்கலைக்கழகம்-தேசிய கல்வியியற் கல்லூரி தொழிநுட்பக்கல்லூரி ஆசிரியர்கல்லூரி) அல்லது அரச ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளராக அல்லது செயற்திட்ட உத்தியோகத்தராக (தேசியகல்வி நிறுவகம்) சேவை புரிபவராக இருப்பதுடன்.

3. 2017.10.01 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நியமனம் பெற்றவராகவும் முதல் நியமனத்திலிருந்து தொடர்ச்சியாக சேவையில் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

4. உங்களின் பட்டம் இலங்கையில் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் பெறப்படாமல் வேறு வெளிநாட்டு வழிவரு (ழடெiநெ) முறையில் பெறப்பட்டதாக இருப்பின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருத்தல் வேண்டும். (வெளிநாடுகளில் பெறப்பட்ட பட்டமாக இருப்பின் மூன்று (03) வருடங்களாக இருத்தல் வேண்டும்).

•    மேற்படி  நிகழ்ச்சித்திட்டத்துக்கான  விண்ணப்பங்கள் 02.09.2018 இருந்து 02.10.2018  வரைக்கும் வழங்கப்படும்.
https://payment.ou.ac.lk என்ற இணையத்தளத்திற்க்கு சென்று
online  முறையின்  மூலம் விண்ணப்பிக்க  முடியும். விண்ணப்ப படிவ கட்டணம் ரூபா 850/=.
•    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் 2018 ஒக்டோபர் 14 ஆம் திகதி நடாத்தப்படும் தெரிவுப் பரீட்சைக்கு
(Selection test)விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற சகல விண்ணப்பதாரிகளும் தோற்றுதல் வேண்டும்.
• தெரிவுப் பரீட்சையில் தகுதி பெற்றவர்களினது விபரப் பட்டியல் மாத்திரம் 2018 நொவம்பர் மாதத்தில் பல்கலைக்கழக இணையத்தளமான
www.ou.ac.lk இல் வெளியிடப்படும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் விண்ணப்பிப்பதற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மன்னார் கற்கை நிலையத்தினை தொடர்பு கொள்ளவும்.

முகவரி - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
மன்னார் கற்கை நிலையம்
RDS கட்டிடம்
சிறிய குருமட வீதி
சாவற்கட்டு.
மன்னார் 
தொலைபேசி இலக்கம் - 023 2251999
 

 தொகுப்பு -வை-கஜேந்திரன்-
மன்னாரில் உயர்கல்விக்கான வாய்ப்பு....இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மன்னார் கற்கை நிலையம் Reviewed by Author on September 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.