அண்மைய செய்திகள்

recent
-

மன்-எழுத்தூர் RTMS பாடசாலையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும்--- மாணவர்களுக்கான செயலமர்வு


தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை முன்னிட்டு மன்னார் எழுத்தூர் றோ.க.த.க பாடசாலையில் 18-09-2018  10-30 மணியளவில் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் மாணவர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றது.

தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை கருத்திற்கொண்டு  கடற்கரையோரம் பேணல் மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வுகள் ஐனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கடல்வளத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
அதன் முதல் கட்ட நிகழவாக காலையில் கீரி கடற்கரையிலும் அதனைத்தொடர்ந்து மன்னார் எழுத்தூர் றோ.க.த.க பாடசாலையில்  மாணவர்களுக்கான
  • கடல் வளம்
  • கடல் பாதுகாப்பு
  • தூய்மை பேணல் தொடர்பாக செயலமர்வு இடம்பெற்றது. இவ்நிகழ்வினை திரு.A.J.டானியல் கடல்வளதிட்டமிடல் அலுவலர் மன்னார். திரு.மொறிஸ் பெர்ணாண்டோ கடலோரக்காவலர் மன்னார் இருவரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் பாசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து பயன்பெற்றனர்.
தொடர்ச்சியாக மன்னாரின் ஏனைய கடற்கரையோர பகுதிகளிலும் சிரமதானப்பணிகள் இடம்பெறவுள்ளது.











மன்-எழுத்தூர் RTMS பாடசாலையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும்--- மாணவர்களுக்கான செயலமர்வு Reviewed by Author on September 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.