அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மாணவிக்கு அமெரிக்காவில் உயரிய விருது -


மதுரை மாணவி ஒருவருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது.
தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார்.
ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம்.

இவரது கண்டுபிடிப்பு, உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டொலர் ரொக்கப்பரிசைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவிக்கு அமெரிக்காவில் உயரிய விருது - Reviewed by Author on September 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.