அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் -


ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளை,சபை அங்கத்துவ நாடுகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.

சிரியா, தெற்கு சூடான், கொங்கோ, மியான்மார் விவகாரங்களில் கவனத்தைக் கொண்டுள்ள ஐ.நா மனதி உரிமைப் பேரவை, சிறிலங்கா விடயத்திலும் கவனத்தை கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள கோரிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இனவழிப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தின் 70ம் ஆண்டு நினைவுகூறலானது, கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலுமான அனைத்துக் கொடுமைகளுக்கும் நீதிதேட, பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இது உத்வேகமூட்டும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.
சிரியா, தெற்கு சூடான், கொங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில், சொந்தந்த நாட்டு மக்களுக்கு எதிராக செய்த குற்றச் செயல்களுக்காக, குற்ற அரசுகளாக அவர்களை பொறுப்பாளிகளாக்கும் படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனிதவுரிமைப் பேரவையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மியான்மர் நாட்டு ரோகிங்க்யாக்களுக்கு நீதி தேடுவதில் உறுதியுடன் செயல்பட்டமைக்காக மனிதவுரிமைப் பேரவையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது.

பேரவையானது தமிழர்களின் சிக்கல் குறித்தும் இதே அளவில் கவனம் செலுத்தி, விடாமுயற்சி செய்யும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.
தமிழர்களின் துயரம் என்பது பெருந்திரள் படுகொலைகளும், கட்டாயக் கருத்தடைகளும், காணாமற்செய்தலும் மட்டுமல்ல, மனிதவுரிமை விழுமியங்களும் சட்டங்களும் வேறுபல வகைகளிலும் கூட மோசமாக மீறப்பட்டன.

ஸ்ரீலங்கா 30-1 தீர்மானத்திலும் 34-1 தீர்மானத்திலும் பேரவைக்குத் தந்த உறுதிகளை 2019ம் ஆண்டு மார்ச்சுக்குள் முழுமையாக நிறைவேற்றத் தவறினால் அந்நாட்டைப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனிதவுரிமைப் பேரவையை வலியுறுத்துகிறது.
அடுத்த ஆண்டு தமிழர் இனவழிப்பின் பத்தாண்டு நிறைவைக் குறிப்பதாகும் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் இத்துணை நீண்ட காலம் காத்திருந்து விட்டனர்.

வரும் நாட்களில் ஜெனிவாவில் நடைபெறும் விவாதங்கள், பேரவை உறுப்பினர்களுக்குத் தரும் ஊக்கத்தால் அவர்கள் சிறிலங்காவைப் பார்த்து, அது நீதிக்குத் தந்த உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறுவதையும் தன் உறுதிகளை மறுதலிப்பதையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் என்று எடுத்துரைப்பார்கள் என நம்புகிறோம்.

மனிதவுரிமைப் பேரவை தனது 39ம் அமர்வில் எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி காண நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகிறது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் - Reviewed by Author on September 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.