அண்மைய செய்திகள்

recent
-

உணவு சாப்பிட்டு 3 ஆண்டுகள்: அபூர்வ நோயால் அவதிப்படும் இளம்பெண் -


அமெரிக்காவில் மாணவி ஒருவர் அபூர்வ நோயால் தாக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக உணவு அருந்தவே முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் 21 வயதான செய்யானே பெர்ரி. இவருக்கு உணவின் வாசனை, குளியல் சோப் அல்லது சலவை சோப்பின் வாசனை உள்ளிட்டவை என்றால் ஒவ்வாமை உள்ளது.
13 வயதில் தாக்கிய இந்த நோயானது இவரை பாதியிலேயே பாடசாலையில் இருந்து வெளியேற வைத்துள்ளது. மட்டுமின்றி உணவுகளை திரவமாக மாற்றியே குழாயால் அவருக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
நோயின் உக்கிரத்தால் இந்த 3 ஆண்டுகளில் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒரு துண்டு கூட அவரால் சாப்பிட முடியவில்லை என கூறப்படுகிறது.

இவரது இந்த நிலையால் செய்யானேவின் பெற்றோர் குடியிருப்புக்கு வெளியே சமையலறை ஒன்றை உருவாக்கி அதில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
மட்டுமின்றி வாசனையே இல்லாத பொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மேலும் உடம்புக்கு வாசனை திரவியங்கள் எதுவும் பயன்படுத்துவதும் இல்லை.
இந்த அபூர்வ நோயால் செய்யானே குடியிருப்புக்கு வெளியே செல்வதே இல்லையாம். மட்டுமின்றி முகத்தை பிரத்யேக முகமூடியால் மறைத்தவாறே நாள் முழுவதும் இருக்கிறார்.
மேலும் இவருக்கு அருகாமையில் கூட உறவினர்கள், நண்பர்கள் என எவரும் செல்வதில்லையாம்.
இருப்பினும், இந்த நோய் தாக்கத்தில் இருந்து தம்மை காத்துக் கொள்ள கற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போது பறவாயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு சாப்பிட்டு 3 ஆண்டுகள்: அபூர்வ நோயால் அவதிப்படும் இளம்பெண் - Reviewed by Author on October 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.