அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது நூலக பகுதியில் அம்மாச்சி உணவகம்-எதிர்ப்பு தெரிவித்த நகர சபை உறுப்பினர்கள் 8 பேர்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் 8 பேர் சபையில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளனர்.

மன்னார் நகர சபையின் 8 ஆவது அமர்வு   திங்கட்கிழமை(22) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது முதலில் அக வணக்கத்துடன் குறித்த அமர்வு ஆரம்பிக்கப்பட இருந்த போது நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் அக வணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நிமிடங்கள் சபையில் இருந்து வெளி நடப்பு செய்திருந்தார்.

பின்னர் அக வணக்கம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் சபைக்கு வருகை தந்தார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு விடையங்கள் தொடர்பில் உறுப்பினர்களினால் சபையில் முன் வைக்கப்பட்டது.

இதன் போது நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் எழுந்து மன்னார் பொது நூலக வளாகத்தினுள் அம்மாச்சி உணவகம் அமைப்பதற்கு  வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்டிடம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

நகர சபை உறுப்பினர்களாகிய எமக்கு எதுவும் தெரிவிக்கப்படாது எவ்வாறு பொது நூலக வளாகத்தினுள் அம்மாச்சி உணவகம் அமைக்க முடியும் என சபையின் தலைவரிடம் கேள்வி எழுப்பினார்.

இதன் போது உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் செல்வக்குமரன் டிலான் ஆகியோரும் எழும்பி குறித்த அம்மாச்சி உணவகம் அமைப்பது தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதனால் சபையில் சிறிது நேரம் சல சலப்பு ஏற்பட்டது.இதன் போது பதில் வழங்கிய சபையின் முதல்வர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.தற்போது அம்மாச்சி உணவகத்தை மன்னார் நகர சபையிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

அமைக்கப்பட்டு வருகின்ற அம்மாச்சி உணவகத்தை ஒரு வருடங்களுக்கு இயங்க விடுவோம்.
அப்போது பிரச்சனைகள் எதுவும் ஏற்படும் பட்சத்தில் மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.என தெரிவித்தார்.

இதன் போது சபையில் எழுந்து உரையாற்றிய உறுப்பினர் என்.நகுசீன் ,,

மன்னார் நகர சபையில் 16 உறுப்பினர்கள் இருக்கின்றோம்.அம்மாச்சி உணவகம் அமைப்பது தொடர்பில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி இறுதி முடிவுகளை எடுத்திருக்க முடியும்.

அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்ட இடம் மன்னார் பொது நூலகப்பகுதி.
எனவே அங்கே கல்வி துறை தொடர்பாக அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்க முடியும் என தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த நகர முதல்வர் குறித்த பகுதியில் பொது மக்கள் கழகம் காணப்பட்டது.
அங்கே கலியாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.அப்போது ஏற்படாத சத்தமும் இடையூர்களுமா? ஆம்மாச்சி உணவகம் அமைக்கும் போது ஏற்படும் என கௌ;வி எழுப்பினார்.

தன் போது எழுந்த உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் பொது மக்கள் கழகம் மாலை 6 மணிக்கு பின்பே இயங்கியது.

ஆப்போது நூலகத்திற்கு இடையூறு ஏற்படுவதில்லை.ஆனால் அம்மாச்சி உணவகத்தில் காலை,மதியம்,மாலை,இரவு   என மக்கள் வருவார்கள்.

இதனால் நூலகத்தில் உள்ள வாசகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இடையூறு ஏற்படும்.
இது ஒரு ஒட்டு மொத்த மக்களினுடைய பிரச்சினை.எனவே மன்னார் பொது நூலக பகுதியில் அமைக்கப்படாமல் வேறு ஒரு இடத்தில் அமைப்பது நல்லது.

எனவே அம்மாச்சி உணவகத்தை மன்னார் நூலக பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் இச் சபையில் இருந்து வெளி நடப்பு செய்கின்றேன் என உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

இதன் போது சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸிற்கு ஆதரவாக உறுப்பினர்களான  ஜோசப் தர்மன்,செல்வக்குமரன் டிலான், எஸ்.குலதூங்க, என்.வடிவுக்கரசி, என்.நகுசீன், ஏ.எம்.யு.உவைசுல் ஹர்னி, எஸ்.டிலானி குரூஸ் ஆகிய 8 உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
எனினும் சபையை தொடர்ந்து நடத்த தலைவர்,உப தலைவர் உற்பட 8 உறுப்பினர்கள் மற்றும் நகர சபையின் செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்பு காணப்பட்டமையினால் சபை தொடர்ந்து இயங்கியது.

இதன் போது சபையில் இருந்து கருத்து தெரிவித்த உறுப்பினர் மைக்கல் கொலின்,,,

-அம்மாச்சி உணவகம் மன்னார் நகரத்தினுள்ளேயே இருக்க வேண்டும் என அவர்களின் திட்டத்திலேயே உள்ளது.அதற்கமைவாக அரசாங்க அதிபரினால் குறித்த இடம் வழங்குவதாக தீர்மாணிக்கப்பட்டிருந்தது.

-எனினும் நகர சபை தலைவர்,மற்றும் உறுப்பினர் என்ற ரீதியிலும் நாங்கள் அம்மாச்சி உணவகத்தை பொது நூலக பகுதியில் அமைப்பது பொருத்தம் இல்லை என்று நாங்கள் உரிய தரப்பினரிடம் தெரிவித்திருந்தோம்.

-அரசாங்க அதிபரிடமும் தெரிவித்தோம். நூலகத்திற்கு அருகில் வருவதினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று.
எனினும் குறித்த விடையம் தொடர்பில் கதைகள் பரப்பப்பட்டது அம்மாச்சி உணவகம் வருவதையும்,மன்னாருக்கு வரும் திட்டங்கள் எல்லாவற்றையும் மன்னார் நகர சபைதலைவர் மற்றும் உறுப்பினராகிய நானும் தடுத்து நிறுத்துகின்றோம்  என்று.

 அரச சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக குறித்த காணி அரச காணி என்பதினால் குறித்த காணிக்குள் அரச கட்டிடம் அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

-எனினும் யு.டி.ஏ. அனுமதியை பெற்றுக்கொள்ள எம்மிடம் வரும் போது மறு பரிசீலினை செய்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.என தெரிவித்தார்.நகர சபையின் உப தலைவர் செபஸ்ரியான் யான்சன் கருத்து தெரிவிக்கையில்,

-மன்னார் பொது நூலக பகுதியில் அம்மாச்சி உணவகம் வருவதை நானும் விரும்பவில்லை.நான் அடிக்கடி நூலகம் சென்று வருவது வழமை.

ஆனால் உணவகம் அமைக்கப்பட்டால் அது பாதீப்பை ஏற்படத்தும்.எனவே அங்கே தற்போது கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.ஆனால் அம்மாச்சி உணவகமாக மாறினால் நானும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்.என தெரிவித்தார்.


இதன் போது கருத்து தெரிவித்த நகர முதல்வர்

அம்மாச்சி உணவகம் அவ்விடத்திலேயே அமைக்கப்படும்.
அவர்கள் வெளி நடப்பு செய்ததன் பின் நாங்கள் பின் வாங்கினோமானால் நாங்கள் தோற்றதுக்கு சமன்.
எனவே அம்மாச்சி உணவகம் அங்கே அமைக்கப்படும்.அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என தெரிவித்ததோடு சபையின் அமர்வு தொடர்ச்சியாக இடம் பெற்று நிறைவடைந்தது.

-மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் 8 பேர்கள் வெளி நடப்பு செய்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,,,

-மன்னார் நகர சபையின் பொது நூலகத்திற்கு அருகாமையில் அம்மாச்சி உணவகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உணவகம் அவ்விடத்தில் வரப்போகின்றது என்ற விடையம் ஒரு உறுப்பினர்களுக்கும் அறியத் தரப்படவில்லை.
-மேலும் அவ்விடத்தில் குறித்த உணவகத்தை அமைக்க அதிகமான உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர்.

-நூலகத்திற்கு அருகாமையில் அம்மாச்சி உணவகம் வருவதினால் வாசகர்களுக்கு இடையூரை ஏற்படுத்தும்.
-அமைப்பதற்கு பல்வேறு பொதுவான இடங்கள் உள்ளது.அங்கே அமைக்க முடியும்.

எனினும் எவ்வித அனுமதியும் எடுக்காது அம்மாச்சி உணவகம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இப்படி நடக்கின்ற போது இச்சபை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

-சபையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய வேளைத்திட்டங்கள் தன்னிச்சையாக இடம் பெறும் பட்சத்தில் நாங்கள் இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதனை கண்டித்தே இச்சபையை விட்டு நாங்கள் வெளி நடப்பு செய்துள்ளோம்.

குறித்த இடத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகத்தின் வேலைத்திட்டங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.வேறு இடத்தில் அமைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னார் பொது நூலக பகுதியில் அம்மாச்சி உணவகம்-எதிர்ப்பு தெரிவித்த நகர சபை உறுப்பினர்கள் 8 பேர் Reviewed by Author on October 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.