அண்மைய செய்திகள்

recent
-

ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் இல்லாமல்.....DCC மாந்தை மேற்கு- படங்கள்

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக பிரதேச செயலகப் பிரிவிற்கான விசேட பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2018.10.18) பிரதேச செயலாளர் தலைமையில்  இடம்பெற்றது.நடைபெற்றது

இந்நிகழ்விற்கு  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்கள் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் க.செல்லத்தம்பு கலந்துகொண்டார்.

நிகழ்விற்கு வருகை தந்த திணைக்கள தலைவர்கள், அலுவலக பதவி நிலை அலுவலர்கள் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம அலுவலர்கள், ஏனைய அலுவலர்கள், கிராமங்களின் பிரதிநிதிகள், ஆகியோரை பிரதேச செயலாளர் வரவேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில்

  • பெரியமடு,காயாநகர், பள்ளமடு கிராம மக்களின் பாதுகாப்பிற்காக யானை வேலி அமைத்தல் 
  • பாப்பாமோட்டை, காத்தாளம்பிட்டி, விடத்தல்தீவு, பகுதிகளுக்கான மீன்பிடி துறை பிரச்சனைக்கான தீர்வை ஆராய்தல், 
  • வனவள திணைக்களத்தினால் போடப்படும் எல்லைக்கல் தொடர்பான ஆராய்வு, 
  • வயல் காணிகளில் பற்றைக்காடுகளை துப்பரவு செய்தல், கருங்கண்டல் வேளான்குளத்தின் நீர் ஏந்தா மேட்டுக்காணியினை மக்களின் குடியிருப்பிற்காக வழங்குதல், 
  • கூறாய் குளம் புனரமைப்பு, பெரியமடு குளம் புனரமைப்பு, இலுப்பைக்கடவை பாலம் புனரமைத்தல்,கடலரிப்பினை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல், மேய்ச்சல் தரை அடையாளப்படுத்தி பயன்பாட்டிற்கு உட்படுத்தல் போன்றவை முக்கிய விடயங்களாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த றிப்கான் பதியுதீன் அவர்கள் " இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடாத்தப்படுவதன் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளை நீக்கவும் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் ஆகும் எனவே அரச ஊழியர்கள் பாரபட்சம் காட்டாது பொதுவான முறையில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அதே போன்று சட்டவிரோத செயல்கள் எமது வளங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சம்பவங்கள் போன்றவற்றை உரிய முறையில் கையாண்டு அவற்றை தடுக்கும் பணியினையும் மேற்கொள்ள வேண்டியது.

 உங்கள் கடமையாகும். மக்களுக்காக சேவையாற்றும் நீங்கள் மக்களின் குறைகளாக இக் கூட்டத்தில் கூறப்பட்ட விடையங்களை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு விரைவாக திட்டமிட்டு அவற்றை செயட்படுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
 சிறப்பு நிகழ்வாக...................
இவ்வாருடம் (2018) ஆம் ஆண்டு இடம் பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்ட  ரீதியாக 187 புள்ளிகளைப பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்ட கருங்கண்டல் றோ.க.தமிழ் கலவன் பாடசாலை   மாணவன் திருப்பதிப்பிள்ளை திருக்குமரன் மற்றும் 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 2 ஆம் இடத்தை பெற்ற அடம்பன் றோ.க. தமிழ் கலவன் பாடசாலை  மாணவன் தயாளன் ஜேம்ஸ் தேவப்பிரியன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவர்களால் நினைவுச்சின்னம் வங்கிகணக்கு ஆரம்பித்தும் கொடுக்கப்பட்டது.
 குறிப்பு
DCC-
ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் யாருமே இக்கூட்டத்தில் சமூகமளிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடையமே..............
 







 














ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் இல்லாமல்.....DCC மாந்தை மேற்கு- படங்கள் Reviewed by Author on October 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.