அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா நிகழ்வு-படங்கள்



மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில்(மன்.டிலாசால் கல்லூரி நானாட்டான்) சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா நிகழ்வானது 19-10-2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் F.விஜயதாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக வைத்தியபிமாணி தேசமானிய கீர்த்திஸ்ரீ வைத்தியகலாநிதி S..லோகநாதன்JP,B.S.M.S.R.A.M.P அவர்களும்


சிறப்பு விருந்தினராக செல்வி ஆனந்தராசா ஜுவிதா இந்துசமய அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் மன்னார் இவர்களுடன் ஆசிரியர்கள் பாடசாலைச்சமூகம் பாடசாலை இந்துமாமன்ற உறுப்பினர்கள் மாணவர்கள் இன்னியம் முழங்க விருந்தினர்கள் மாணவர்களின் கரவொலிகளுடன் வரவேற்கப்பட்டனர்.

மங்களவிளக்கேற்றலுடன் தமிழ்தாய் வாழ்த்தொழிக்க நிகழ்வுகள் ஆரம்பமானது மாணவர்களின் நடனம் நாடகம் பாட்டு வினாவிடைப்போட்டி கூத்து என்பன சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றது.

விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்த கல்லூரி முதல்வர் சமயங்களின் தொணிப்பொருளில் எல்லாம் தர்மத்தின் வழியிலும் விசுவாசத்தின் வழியிலும் நடப்பதற்கு துணைபுரிகின்றது அத்துடன் மாணவர்கள் கற்கும் காலத்திலேயே நல்ல ஒழுக்கவிழுமியங்களை கற்றுப்பணிவுள்ளவர்களாக திகழவேண்டும் என்றார்.

சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட செல்வி ஆனந்தராசா ஜுவிதா அவர்கள் தனது உரையில் கல்விக்கும் செல்வத்திற்கும் வீரத்திற்கும் அதிபதிகளான தேவிகளின் சரஸ்வதி தேவியின் வாணிவிழாவின் சிறப்பும் விழாவின் தன்மையும் பற்றி தெளிவுபடுத்தினார்.

பிரதமவிருந்தினராக வைத்தியபிமாணி வைத்தியகலாநிதி S.லோகநாதன் தனது உரையில் திருப்புகழை பாடி காண்பித்து மாணவர்கள் எப்போதும் உண்மையுள்ளவர்களாகவும் நேர்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்
அதேபோன்று இந்தவயசில் தான் முறையாக கற்றுத்தேற வேண்டும் தனது இளமைக்காலத்தில் தான் கல்விகற்க பட்டதுயரத்தினையும் அன்று அந்த துயரங்களை தாங்கியதால் தான் இன்று உங்;கள் முன்னிலையில் ஒரு வைத்திய கலாநிதியாக நிற்கின்றேன். இதற்கு முக்கிய காரணம் என்னை சரியான முறையில் கற்பித்தவர்கள் ஆசிரியர்கள்தான் நாம் எந்தப்பெரிய ஆளானாலும் எமக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை மறக்ககூடாது மரியாதை செலுத்தவேண்டும்.

மாதா பிதா குரு தெய்வம் தாய் தந்தைக்கு பின்பு குரு தான் குருவிற்கு பிறகுதான் நம்மைப்படைத்த தெய்வம் என்றால் பாருங்கள் குருவிற்கு உரிய சிறப்பான இடத்தினை கொடுத்துள்ளார்கள் சான்றோர்கள் தனது உரையை நிறைவு செய்தவர் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் 9A பெற்ற 02 மாணவர்களுக்கும் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். சிறப்பான முறையில் செயலாற்றும் கல்லூரிக்கும் வெற்றிக்கிணணம் வழங்கி சிறப்பு செய்தார்.

மாணவமாணவிகளின் சிறப்பான கலைநிகழ்வுகளுடன் நிகழ்ச்சியினை J..ஜெயப்பிரதா தொகுத்து வழங்கினார் வாணி விழா இனிதே நிறை வுற்றது.

-வை.கஜேந்திரன்-
















































மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா நிகழ்வு-படங்கள் Reviewed by Author on October 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.