அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மன் செல்ல முயற்சித்த இலங்கையரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்!


ஜேர்மன் செல்ல முயற்சித்த இலங்கையரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்! இலங்கையில் மிகவும் ஏழ்மையான ஒருவர் அவுஸ்திரேலியாவில் மிகப் பெரிய பணக்காரரான விதம் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குருணாகல், நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த சந்திரா திஸாநாயக்க அப்பிள் கம்பனியின் கிளை நிறுவனத்தில் பிரதான பதவியை பெற்றுள்ளார்.
தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அவுஸ்திரேலியாவில் செயற்படும் அப்பிள் நிறுவனத்தின் உரிமையாளராக சந்திரா மாறியுள்ளார்.
இணையத்தளம் ஊடாக வருடாந்தம் 8 பில்லியன் டொலர் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை அவர் விற்பனை செய்து வருகின்றார்.
சந்திரா திஸாநாயக்க தனது கபொத உயர்தர படிப்பின் பின்னர் ஜேர்மன் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் அவரது பயணம் பாகிஸ்தானுடன் நிறைவடைந்துள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்தவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய நிலையில், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
சிறிது காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் துப்பறவு பணியில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் கையெடு பகிரும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு மிகவும், கடினமாக வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.
அங்கிருந்து சிறு கைதொழில் ஒன்றை அவர் ஆரம்பித்துள்ளார். அதற்கமைய இணையம் ஊடாக கையடக்க தொலைபேசி, கணனி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட முயற்சியின் பின்னர் உலகின் முன்னணி நிறுவனமான அப்பிள் கம்பனியின் ஐபோன்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினார்.
அவரது முயற்சி பெரும் வெற்றியளித்துள்ள நிலையில், தற்போது மிகப்பெரிய ஐபோன் நிறுவனத்தின் உரிமையாளராகியுள்ளார். அவரது நிறுவனம் வருடந்தம் பில்லியன் டொலர்களை வருமானத்தை ஈட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் செல்ல முயற்சித்த இலங்கையரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்! Reviewed by Author on October 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.