அண்மைய செய்திகள்

recent
-

முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடு இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட இழப்புகள்.


கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் அதிக இழப்புகளை சந்தித்த நாடுகள் குறித்த பட்டியலை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது.

புவி வெப்பமடைவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு, உலகில் பல்வேறு பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் இவற்றில் பிரதானமாக உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 1998ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஐ.நா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் பேரழிவுகளால் 944.8 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சீனா 492.2 பில்லியன் டொலர்கள் இழப்பு, ஜப்பான் 379.5 பில்லியன் டொலர்கள் இழப்புகளை சந்தித்துள்ளன.
இந்தியா 79.5 பில்லியன் டொலர்கள் இழப்பினை சந்தித்துள்ளது. பிரிட்டோ ரிகோ 71.7 பில்லியன் டொலர்கள் இழப்புகளை சந்தித்துள்ளது. இதேபோல் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

இதில் ஜேர்மனி 57.9 பில்லியன் டொலர்களையும், இத்தாலி 56.6 பில்லியன் டொலர்களையும், பிரான்ஸ் 48.3 டொலர்கள் இழப்புகளையும் சந்தித்து முதல் 3 இடங்களில் உள்ளன.
சுமார் 20 லட்சம் பேர் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 440 கோடி மக்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடு இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட இழப்புகள். Reviewed by Author on October 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.