Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

பொதுநூலகத்திற்கு அருகில் அம்மாச்சி உணவகம் என்பது போய்....அம்மாச்சி உணவகம் அருகில் பொதுநூலகம் தேவையா…? புத்திஜீவிகள்…???

மன்னார் மாவட்டதின் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் நாசகாரிய செயல்பாடுகள் ஏராளம் நடந்து முடிந்துள்ளது இன்னும் நடைபெற்றுக்கொண்டுள்ளது இதை யாரும் கண்டுகொள்ளவில்லை கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு பின் பக்கம் பக்கமாக அறிக்கை விடுவதிலும் புலம்புவதிலும்  என்ன பயன் உள்ளது. மக்களே…. புத்திஜீவிகளே….

அபிவிருத்திகளும்-விளையாட்டு மைதானம்
 • பள்ளிமுனையில் மைதானம் 2வருடங்கள் கடந்தும்
 • நறுவிலிக்குளம் தொடங்கி சில மாதங்களில்-தொல்பொருளியல்
 • எமில் நகர் விளையாட்டு 400 மீற்றர் மைதானம்
 • தலைமன்னார் பிரதான வீதியில் பூங்காவும் பெரிய நீர் தொட்டி அப்படியே கிடக்கின்றது.
 • நானாட்டான் அரிசி ஆலை மற்றும் களஞ்சிய அறைகள்
 • சுய வேலைவாய்ப்பு கட்டிடங்கள்(உற்பத்தி முதலீடு இன்றி)
 • சிறுவர் பூங்காக்கள்
 • கிராமப்புறங்களில் கட்டப்பட்ட அரச அலுவலகங்கள்
 • அரச விருந்தினர் விடுதிகள்
 • கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள்
 • பிரதான வீதிகள் வாய்க்கால்கள் -முறையான வடிகால் இல்லாமை  இவையாவும் பலமில்லியன் ரூபா செலவில் கட்டிதிறப்புவிழா பெரிதாக செய்து கழுதைகளும் நாய்களும் மாடுகளும் படுக்கும் இடங்களாக பாழடைந்து காட்சியளிக்கின்றது.  
 • இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம் என்ன என்று சிந்திப்போமானால் மூன்று காரணங்களே...! தான்
 • முறையாக திட்டமிடாமை
 • பொதுநலத்திலும் சுயநலம்
 • மக்களையும் சேவை நலனையும் கருத்தில் கொள்ளாமை
மேலே குறித்த 03விடையங்களில் தான் அடங்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும்
எந்த திட்டமானாலும் அந்த திட்டத்தின உச்சபயன் எல்லை தீர்மானிக்கப்படவேண்டும் நீண்ட கால பயன் மக்களின் விருப்பம் தேவையின் அவசியம் பாவிக்கும் தன்மை என்பன அறியவேண்டும் மக்களுக்கும் பயனாளர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும்.

மன்னார் மாவட்டத்திற்கு தற்போது பலவகையாக அபிவிருத்திக்கு பாரிய தொகையில் நிதிகள் ஒதுக்கபடுகின்றது ஆனால் அவற்றினை சரியான முறையில் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விதத்தில் அபிவிருத்தியினை செய்கின்றார்களா…என்றால் அதுகேள்விக்குறிதான்…. ஏன் இந்த நிலை என்று பாரத்தால் காரணம் சிறுபிள்ளைத்தனமானது
அபிவிருத்தி தொடர்பான எந்தவித அறிவற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படகின்றது.
அதிகாரிகளுக்கிடையே நல்ல உறவு நிலை இல்லை நீ பெரிதா நான் பெரிதா என்ற தர்க்கம்
குளிர் அறையில் இருந்து கொண்டு கையொப்பம் போடுவதைதவிர அபிவிருத்தி நடைபெறும் இடங்களுக்கு உயர் அதிகாரிகள் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை எடடிப்பார்பதில்லை அப்படியாயின் எப்படி அந்த அபிவிருத்தி தரமான அபிவிருத்தியாக இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்.

 05 வருடங்கள் பாவிக்கும் என்றால் வெறும் 05 மாதங்களிலே காணாமல் போய் விடும்.
 காணமல் பேய்விடும்  தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பெரிய வேலைத்திட்டம் நவீன பேரூந்து நிலையம் அத்தோடு அம்மாச்சி உணவகம்…
மன்னார் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் வேகமாக கட்டபட்டு வருகின்றது நிறையப்பேர் பட்டினி கிடக்கின்றார்களாம் அவர்களுக்கு குறைந்த விலையில் தரமான சாப்பாடு போடப்போகின்றார்களாம்.....

ஏற்கனவே மன்னார் பொதுவைத்திய சாலையிற்குள்ளும் முருங்கனிலும் உள்ள அம்மாச்சி உணவகங்களில் மக்கள் நிறைந்து வழிகின்றனராம் அத்தோடு அவசர அவசரமாக 03வது அம்மாச்சியினை கண்ணே கண்ணே என்று இருக்கின்ற ஒரே ஒரு நூலகத்திற்கு அருகில் அமைக்கின்றார்கள் அறிவுஜீவிகளின் கூட்டம் ஒன்று.....
இதை என்னவென்று சொல்வது. தற்போதுதான் மன்னார் பொதுநூலகத்திற்கு மாணவமாணவிகள் வந்து கல்விச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் அதையும் தடுப்பதற்கு என்றே இத்திட்டமா…

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எத்தனை அனுமதிகள் எடுக்கவேண்டும் தெரியுமா...???
அத்தனை அனுமதியினையும் எடுத்தார்களா....அப்படியானால்.....

மாணவர்களுக்கு அம்மாச்சி உணவு முக்கியமா அருமையான நூலகம் முக்கியமா…....?
கடந்த மாத நகரசபை அமர்வில் அம்மாச்சி  உணவகத்திற்கு எதிராக 08 நகரசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர் அவர்களுக்கு மன்னாருக்கு வரும் நல்ல திட்டங்களை தடுக்கின்றார்களாம் என்று வசை பாடியுள்ளனர். இங்கு கட்டாவிடில் வந்த நிதி திரும்ப போய்விடுமாம்.

இலவசம் என்பதற்காக விஷத்தினை குடிக்க முடியுமா…!!!

கட்டுவதற்கு இடமா இல்லை….....???
 • தற்போது அமைந்துள்ள அரச பேரூந்து தரிப்பிடம்
 • பழைய அரசபேரூந்து டிப்போ ரெலிக்கொம் அருகில் உள்ளது
 • கச்சேரி வளாகத்தில் பழைய பனைவள உற்பத்தி கடைகள் இருந்த இடம்
 • மன்னார் கூட்டுறவுச்சங்கம் (இராணுவத்தினர் விடுவித்தமை)
 • நவீன பேரூந்து தரிப்பிடம் அமையப்போகும் மேற்தலத்தில்
 • மரக்கறி சந்தையின் மேற்தலத்தில்
 • வாகனதரிப்பிடத்திற்கு ஒதுக்கியுள்ள பகுதியில்  இவ்வாறு பல இடங்கள் இன்னும் இருக்கின்றது.
 • தேடினால் தானே தெரியும் இருந்த இடத்தில் இருந்துகொண்டு பார்த்தால் முன்னுக்குள்ளது தானே தெரியும்.
மன்னார் பொதுநூலகத்திற்கு அருகில் அம்மாச்சி உணவகத்தினை முதலில் வெகுசிறப்பாக திறந்த பின்பு பின்பக்கமாக பூட்டிக்கிடக்கும் BAR-கிளப்பினையும் சத்தமில்லாமல் திறவுங்கள் இப்போது இடைஞ்சலாக இருப்பது பொதுநூலகம் அதைக்கொண்டு போய் சுடலைக்கு அருகில் வையுங்கள்…விளங்கிரும் மாணவர்களின் கல்விநிலை…

பொதுநூலகத்திற்கு அருகில் அம்மாச்சி என்பது போய்
பொருத்தமில்லாமல்  அம்மாச்சி அருகில் பொதுநூலகம் இருக்கலாம என்று மிகவிரைவில் கேள்வி வரும் அப்போதும் புத்திஜீவிகளின் பதில்….அதுதானே…பொதுநூலகம் தேவையில்லை….
வயிற்றை நிரப்புவது எவ்வளவு முக்கியமோ…அதே போல் ஆளுமைக்கு அறிவினையும் நிரப்பவேண்டும் அதற்கான இடங்களில் ஒன்றுதான் நூலகங்கள்….(இருக்கும் பொது நூலகத்திலே இன்னும் நிறைய அபிவிருத்திகள் செய்ய இருக்கு அதை விட்டிற்று...40- 60 நீளத்தில் மாணவர்களுக்கான  கலைமண்டபம் ஒன்றை உருவாக்கலாம்)

மன்னாருக்கு வரும் அபிவிருத்திகளை தடுப்பதோ நிறுத்துவதோ.....! அதிகாரிகளை குறைசொல்வதோ.....! எங்கள் நோக்கமல்ல…
அபிவிருத்திகள் அபிவிருத்திகளாக எமது மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதே எமது வேண்டு கோள்....!
திட்டமிடுங்கள் கலந்தாலேசியுங்கள் செயல்படுங்கள்
இனிசெய்யப்போகின்ற அபிவிருத்திகள் ஒவ்வொன்றும்….!!!???…


-மன்னார்விழி-

 தற்போது அமைந்துள்ள அரச பேரூந்து தரிப்பிடம்
 பழைய அரசபேரூந்து டிப்போ ரெலிக்கொம்


பொதுநூலகத்திற்கு அருகில் அம்மாச்சி உணவகம் என்பது போய்....அம்மாச்சி உணவகம் அருகில் பொதுநூலகம் தேவையா…? புத்திஜீவிகள்…??? Reviewed by Author on November 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.