அண்மைய செய்திகள்

recent
-

கனடா அரசாங்கம் மீது வழக்கு தொடர்ந்துள்ள அகதி -


அகதி ஒருவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாக, இழப்பீடு கோரி கனடா அரசாங்கத்தின்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

Burundiஇலிருந்து அகதியாக கனடா வந்தவர் Prosper Niyonzima (36). 1995ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலையில் தனது குடும்பத்தை பறிகொடுத்த Prosper, கனடாவில் வாழ்வுரிமம் பெற்று வாழும்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் Catatonia என்ற மனநலப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறி அவர் கனடா அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது சரியான உணவோ, உடைகளோ, மருத்துவ உதவிகளோ முறையாக வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கும் Prosper, வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோக தனக்கு ஷாக் சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் Prosper தெரிவிக்கிறார். 65 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி Prosper கனடா அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதோடு, தனது உரிமைகளும் சுதந்திரமும் மீறப்பட்டதாக ஃபெடரல் அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தனிமைச் சிறையில் தான் அடைக்கப்பட்டபோது அங்கு தான் மனிதத்தன்மையற்ற வகையில் நடத்தப்பட்டதால் தனது மனநலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும், மூன்று ஆண்டுகள் தான் பேச்சுத்திறமையை இழந்திருந்ததாகவும், தான் சிறையிலிருந்ததால் தனது மகளை கவனித்துக் கொள்ள இயலாமல் போனதால், தான் மிகவும் நேசிக்கும் தனது
மகள் தத்து கொடுக்கப்பட்டு விட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார் Prosper.

தனது கண்முன் தம் பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் இழந்த Prosper, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும், காவலிலிருக்கும்போது அதற்கான சிகிச்சை தனக்கு மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
நான் ஏற்கனவே எனக்குள்ளே குரல்கள் கேட்கும் அளவில் மன அழுத்தத்தில் இருந்தேன், சிறை என் நிலைமையை மோசமாக்கி விட்டது என்கிறார்.


கனடா அரசாங்கம் மீது வழக்கு தொடர்ந்துள்ள அகதி - Reviewed by Author on November 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.