அண்மைய செய்திகள்

recent
-

துன்பமிக்க வன்முறை சூழல் நாட்டில் பொறுப்புள்ளவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டமை...வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருஅவை

இந்நாட்டில் மீண்டும் ஒருமுறை மிகப் பெரிய ஐனநாயக மீறல் இடம்பெற்று
நீதிக்கும் உண்மைக்கும் மானிட நேயத்துக்கும் அவலமான வலிந்த சூழல்
ஏற்படுத்தப்பட்டு சட்டம் ஒழுங்கு அரசியல் சாசனம் முடக்கப்பட்டு
துன்பமிக்க வன்முறை சூழல் நாட்டில் பொறுப்புள்ளவர்களாலேயே
ஏற்படுத்தப்பட்டமை மிகவும் வேதனைக்கும் ஏமாற்றத்துக்குமுடைய விடயமாகும்
 என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு மெதடிஸ்த திரு அவை விடுத்திருக்கும் ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது. இன்றைய நாட்டின் நிலமை தொடர்பாக வடக்கு கிழக்கு அனைத்து மக்களினதும் சார்பிலும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட சார்பிலும் ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவோடு மிகவும் வன்மையான கண்டனத்தையும் நாம் தெரிவித்து நிற்கின்றோம்.

மேலும் ஐனநாயக சூழல் நிலையினதையும் ஏற்படுத்தி மக்களின் இயல்பு நிலை வாழ்வுக்காகவும் மானிட நேய மாண்பிக்காகவும் செயற்படுமாறு நீதிக்காக செயற்படும் அனைத்து தரப்பினரையும் கோரி நிற்கின்றோம்.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கொடிய அழிவுகளையும் பாரிய இழப்புக்களையும் சந்தித்து இந்நேரம் வரை எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது தங்கள் அடிப்படை உரிமைகளை பெறுவதற்காக ஏங்கி நிற்கும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தற்பொழுது உள்ள ஐனாதிபதிக்கு வாக்களித்தனர்.

இதுமாத்தரமன்றி தமிழ் மக்களிடம் பல வாக்குறுதிகளை வழங்கி பாரியதொரு
நம்பிக்கையை ஏற்படுத்தி தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் தேர்தலில்
வென்று நல்லாட்சியை அமைத்து இருளான சர்வாட்சிக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டாச்சி என்றும் இவ் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு
வழங்குவதாகவும் இறுதிப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக சர்வதேசத்துக்கும் ஐக்கிய
நாடுகளுக்கும் வாக்குறுதி வழங்கினாலும் கடந்த மூன்று வருடங்களாக இவைகள் வெற்று வாக்குகளாகவே இருக்கின்றன.

இந்நிலையில் எவருடைய சர்வதிகார ஆட்சியை முடித்து நாட்டின் பேரழிவை
முடித்தேன் என அரசு தலைவர் இதுவரை காலமும் முழக்கமிட்டாரோ அவரையே இந்நாட்டின் அரசியலமைப்பையும் மீறி ஐனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி நாட்டின் இரண்டாம் நிலை பதவியில் அமர்த்தியுள்ளார்.

இவ்வாறான ஐனநாயகம் மற்றும் நாட்டின் அரசியலமைப்பின் மீறல் சட்டவிரோத செயல்பாட்டை தொடர்ந்து  நாடாளுமன்றத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தமையானது கிட்டத்திட்ட ஒரு சர்வதிகார ஆட்சியின் வடிவம் என யாரும் மறைக்க முடியாது.

இதன் மூலம் நாட்டின் அமைதியும் ஐனநாயகமும் ஓர் அச்சுறுத்தலைச் சந்தித்து சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. வன்முறை சூழல் தாண்டவமாடத்
தொடங்கியுள்ளது. மீண்டும் பொது மக்கள் பாரிய நெறுக்கடிக்கும் மரண
யுத்தத்துக்கும் உள்ளாகி அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்ற பயத்தில்
நிற்கின்றனர். அத்துடன் நாடு பெரும் பாதிப்புக்கும் உள்ளாகி
இருக்கின்றது.

எனவே இவ்வாறான ஐனநாயக மறுப்பு வன்முறை சூழலை ஏற்படுத்தி நாட்டு மக்களை
அவல நிலைக்கு தள்ளுவதற்கு ஆணை வழங்கவில்லை. எனவே இவ்வாறான சூழலை அகற்றி
அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என நீதியையும் சமாதானத்தையும்
விரும்புகின்ற அனைவரினதும் தலையாய கடமையாகும்.

இவ் சுழலை முடிவுக்கு கொண்டு வந்து ஐனநாயகத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்தை கூட்டி பொறுத்தமாகவும் ஐனநாயகத்தின் அடிப்படையிலும் அரசினை கோருவதோடு இதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து சமயங்கள் சிவில் மானிட செயற்பாட்டாளர்களையும் கோரி நிற்பதோடு இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அனைவரும் ஒன்றினைந்து நீதிக்காகவும் சமாதானத்துக்காகவும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பாகாவும் பணியாற்றுவோம் என தெரிவித்து நிற்கின்றோம்.  என இவ் ஊடக செய்தியில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு மெதடிஸ்த  திருமாவட்ட அவை தலைவர் அருட்பணி.எஸ்.எஸ்.ரெரன்ஸ், இதன் செயலாளர் அருட்பணி சுஐதர் சிவநாயகம் ஆகியோர் கையொப்பமிட்டு இவ்அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

துன்பமிக்க வன்முறை சூழல் நாட்டில் பொறுப்புள்ளவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டமை...வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருஅவை Reviewed by Author on November 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.