அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நாளில் லொட்டரியில் 100 மில்லியன்களை அள்ளிய ஒரு கிராம மக்கள்:


ஸ்பெயின் நாட்டில் உள்ள Sodeto கிராமத்தில் குடியிருக்கும் மொத்த மக்களும் ஒரே நாளில் 100 மில்லயன் யூரோ அளவுக்கு லொட்டரியில் பரிசை அள்ளிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புறநகர் பகுதி இந்த Sodeto கிராமம்.
விவசாயத்தை நம்பியே பிழைப்பை நடத்தும் மக்கள். ஸ்பெயின் நாட்டில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடியால் வேலையின்மை இங்கு உச்சம்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் தீரா கடனில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையிலேயே ஒரே நாள் இரவில் இங்குள்ள மொத்த மக்களும் கிறிஸ்துமஸ் லொட்டரியில் 100 மில்லியன் யூரோ தொகையை பரிசாக வென்று அசத்தியுள்ளனர்.
இங்குள்ள லொட்டரி விற்பனையாளர் குறிப்பிட்ட எண் கொண்ட லொட்டரிகளை மட்டுமே விற்பனைக்கு வைக்கின்றனர்.

இதனால் பெரும்பாலான மக்களுக்கு பரிசு கிடைத்தும் வந்துள்ளது. இதே நிலை தான் Sodeto கிராமத்தின் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் லொட்டரி வெற்றி எண்களை அறிவித்ததில் அந்த கிராமத்தில் குடியிருக்கும் 250 பேரும் வெற்றியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடனில் தத்தளித்த விவசாய மக்களுக்கு சுமார் 100 மில்லியன் யூரோ லொட்டரி பரிசாக கிடைத்துள்ளது.
ஆனால் இந்த கிராமத்தில் குடியிருக்கும் ஒரே ஒருவர் மட்டும் இந்த வெற்றிக் களிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இங்கு குடியிருக்கும் கிரேக்க நாட்டவருக்கு கிறிஸ்துமஸ் லொட்டரி தொடர்பில் எந்த தகவலும் தெரியாமல் போயுள்ளது. அதனால் அவர் லொட்டரி வாங்கவில்லை என் கூறப்படுகிறது.

ஒரே நாளில் லொட்டரியில் 100 மில்லியன்களை அள்ளிய ஒரு கிராம மக்கள்: Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.