அண்மைய செய்திகள்

recent
-

மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பளத்தில் 20 வீதம் பிடித்தம்! -


மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையில் உள்ள நிறுவனத்திலிருந்து பாதியிலேயே வெளியேறுவதை தடுக்க சம்பளத்தில் 20 பிடித்தம் பிடித்தம் செய்யும் திட்டத்தை மலேசிய மனிதவள அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் 20 வீத தொகை SOCSO எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன்.
இரப்பர் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரிகையாளரிடம் பேசிய அவர், “இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட இருத்தரப்பினரும் பலனடைவர்.
வேலைக்காலம் முடிந்து தொழிலாளர்கள் வெளியேறும் போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை தொழிலாளர்களிடமே ஒப்படைக்கப்படும்” எனக் கூறியிருக்கிறார்.

மலேசிய தேசிய தொழிலாளர் ஆலோசனை கவுன்சிலிடம் இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவு சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசனைகளுக்கு பின்னர் இது நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான திட்டம் புதிதான ஒன்றல்ல, ஏற்கனவே ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடைமுறையில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பளத்தில் 20 வீதம் பிடித்தம்! - Reviewed by Author on December 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.