அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய் கிரகத்தில் கேட்ட ஒலி! வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள் -


செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய இன்சைட் விண்கலத்தில், காற்றின் அதிர்வலை போன்ற ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 5ஆம் திகதி, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வடிவமைத்த ரோபோ விண்கலமான இன்சைட்-ஐ விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
காற்றின் அதிர்வலைகளை இன்சைட் விண்கலம் ஒலியாக பதிவு செய்துள்ளது. அந்த கிரகத்தின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி, 10 முதல் 25 mph வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து நாசாவின் புரூஷ் பெனர்ட் கூறுகையில், ‘நாங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள இன்சைட் அதிர்வலைகளையும், ஒலியையும் பதிவு செய்யும் தொழில்நுட்பம் கொண்டது.
இந்த மாதிரியான சின்ன சின்ன சத்தங்களும், கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். தற்போது இன்சைட் பதிவு செய்து அனுப்பியுள்ள ஒலியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு எதிர்பாராத விருந்து தான்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒலியை முதன்முதலாக கேட்டுள்ளதாகவும், இது மிக சாதரணமான ஒலியாக இல்லை என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே இன்சைட் விண்கலம் முக்கியமான, அதிசயத்தக்க வேலையை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் கேட்ட ஒலி! வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள் - Reviewed by Author on December 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.