அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கட்டாக்காளி கால்நடையால் விபத்துக்கள் அதிகம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மன்னார் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டு

மன்னார் பகுதியில் பொது மக்கள் எதிர்நோக்கும் பலவிதமான பிரச்சனைகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்து அவைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கடந்த புதன் கிழமை (05.12.2018) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுனர் சபையினர் இதன் தலைவர் அருட்பணி ஞானப்பிராசம் அடிகளார் தலைமையில் மன்னார் அரசாங்க அதிபர் சி.எ.மோகன்ராஸை சந்தித்தது.

 இவற்றில் ஒன்றாக  கால்நடை வளர்ப்போரின் கால்நடைக்கான தகுந்த மேய்ச்சல் நிலம் இல்லாமையால் பெருந்தொகையான கால்நடை இராப்பகலில் வீதிகளில் நடமாடுவதுடன் இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழக்கும் நிலை உருவாகி வருவதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்தபோது இவ் பிரச்சனையை முன்வைத்தது.

இவற்றுக்கு பதிலளித்த அரசாங்க அதிபர் மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல்
நிலம் இல்லையென தற்பொழுது குறைகூற முடியாது. முன்பு மன்னார் பகுதிக்கான மேய்ச்சல் நிலம் இனம் காணப்பட்டிருந்தபொழுதும் இவைகள் சில வன இலாகாப் பகுதிக்குள்ளும் இன்னும் சில விவாயிகளினால் சட்டவிரோமாக விவசாயத்தை மேற்கொண்டு வருவதால் அப்பகுதிகளில் கால்நடையை மேய்ச்சலுக்கு விடமுடியாத நிலை தொடர்ந்தது.

இது விடயமாக அன்மையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட வன இலாக மற்றும் இது சம்பந்தமான அதிகாரிகளுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடப்பட்டு பல இடங்களில் மேய்ச்சல் நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டள்ளன.

சிலவற்றை மேய்ச்சல் நிலமாக சட்டவரைக்குள் கொண்டு வரவில்லையென்றபோதும் வன இலாகா அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதில் இவ் இடங்களில் மேய்ச்சல்
நிலங்களாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அதிகமான விவசாயிகளே கால்நடை வளர்ப்போராகவும் இருக்கின்றனர். இவர்களே சட்டவிரோதமாக மேய்ச்சல் நிலங்களை விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படும்போது கால்நடை நிலைப்பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முற்படும்போது பல இடையூறுகளுக்கு அரச அதிகாரிகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே மன்னார் மாவட்ட பொது மக்களின் பிரதிநிதிகளாக செயல்படும் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு
நீங்களும் எங்களுடன் இணைந்து செயல்படும்போது பல பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள வாய்ப்பு எற்படும் என நம்புகின்றேன்.

தேக்கம் பகுதியில் 150 ஏக்கர், இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் 500 ஏக்கர்,
கட்டுக்கரைக்குளம் பகுதியில் 2000 ஏக்கர், வன ஜீவராசி பகுதிக்கு உட்பட்ட
இடங்களில் வெள்ளாங்கும், பாலியாறு பகுதியில் மூன்றாம்பிட்டி
பட்டிவெளியில், கூறாய்பகுதியில் சீடிவிநாயகர்குளம், பள்ளமடுப்பகுதியில்
மையிலடி, காயாநகர் பகுதியில், பெரியமடு பகுதி ஆகிய இடங்களில் அவ்வப்பகுதி கால்நடை வளர்ப்போர் நலன் கருதி மேய்ச்சல் நிலங்கள் அடையாளமிடப்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் கால்நடை வளர்ப்போர் அக்கறையின்றி செயல்படுவதாலேயே இவ்வாறான செயல்பாடு ஏற்படுவதாக எமக்கு தோன்றுகின்றது. வீதிகளில் கட்டாக்காளிகளாக திரியும் கால்நடை சம்பந்தமாக நகர சபை மற்றும் பிரதேச சபைகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உடன் மன்னார் நகர சபைக்குச் சென்ற மன்னார் மாவட்ட
பிரஜைகள் குழு ஆளுனர் சபை  குழவினர் மன்னார் நகர சபை தலைவர்
ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனை சந்தித்து தெருக்களில் கட்டாக்காளி
கால்நடையால் ஏற்படும் விபத்துக்களை எடுத்தக்கூறியபோது இவ்
வாரத்திலிருந்து தெருக்களில் நிற்கும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதற்கான
நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இவ் சந்திப்பில் மன்னார் நகர சபை
உறுப்பினர் மைக்கல் கொலினும் உடன் இருந்தார்.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர் இதற்கான நடவடிக்கையைமேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




மன்னாரில் கட்டாக்காளி கால்நடையால் விபத்துக்கள் அதிகம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மன்னார் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டு Reviewed by Author on December 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.