அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரியின் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிலடி!


விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு தான் ஒருபோதும் உடன்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டில் அண்மை காலமாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க நேற்று ஐந்தாவது தடவையாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் பல தலைவர்களையும் பொதுமக்களையும் கொலை செய்த விடுதலை புலிகள், சர்வதேச ரீதியில் செயற்பட்டு கொண்டு இருப்பதாக குறிப்பிட்டார்
எனினும், போரில் வெற்றி கொண்டு நாட்டை பாதுகாத்த படையினர் தண்டனைக்கு உட்படுத்தப் படவேண்டுமென சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
விடுதலை புலி சந்தேகநபர்களை விடுவித்து விட்டு, படையினருக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமது கருத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.
“போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவது மற்றும் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்று, சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழியை, ஜனாதிபதியின் கருத்து மீறுவதாக அமைந்துள்ளது என்று மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரியின் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிலடி! Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.