அண்மைய செய்திகள்

recent
-

பிரதமரின் பொறுப்பின் கீழ் வரும் அமைச்சுக்களின் செயலாளராக தமிழர் நியமிப்பு -


30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான 30 செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஹேமசிறி பெர்னாண்டோ - பாதுகாப்பு அமைச்சு
எஸ்.எம். மொஹமட் - தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவகாரம்.
வீ. சிவஞானசோதி - தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
பத்மசிறி ஜயமன்னா - கல்வியமைச்சு.
ஆர்.எம்.டி.பி. மிகஸ்முல்ல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு.
ஜே.ஜே. ரத்னசிறி - அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சு.
கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட - மின்வலு, எரிசக்தி, வர்த்தக அபிவிருத்தி அமைச்சு
எல்.பி. ஜயம்பதி - போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு.
என்.ரூபசிங்க - பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு.
எச்.ரி. கமல் பத்மசிறி - உள்விவகாரம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சு.
ஜே.ஏ. ரஞ்சித் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு.
எல்.டி. சேனாநாயக்க - பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் வறண்ட வலய அபிவிருத்தி அமைச்சு.
டி.எம்.ஏ.ஆர்.பீ. திஸாநாயக்க - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.
பீ. சுரேஷ் - மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு
எச்.எம். காமி செனவிரட்ன - தொழில், தொழிற்சங்க தொடர்புகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
கே.டி.என்.ஆர். அசோக - கைத்தொழில், வணிகம் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்தோரை மீள்குடியேற்றும் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு.
கே.டி.எஸ். ருவான்சந்திர - விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு.
ரவிந்திர ஹேவாவிதாரண - அரச நிறுவனங்கள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு.
டப்ளியூ.எச். கருணாரத்ன - காணி, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு.
எம்.வை.எஸ். தேசப்பிரிய - தேசிய ஒருமைப்பாடு, அரசமொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு.
கே.பி. பேர்னட் வசந்த சில்வா - வீடமைப்பு, நிர்மாணத்துறை,கலாசார விவகார அமைச்சு.
எஸ்.டி. கொடிக்கார - அபிவிருத்தி வழிமுறை, சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு.
டப்ளியூ. ஏ. சூலானந்த பெரேரா - தொலை தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
வசந்த பெரேரா - சுகாதாரம், போஷாக்கு, சுதேச மருத்துவத்துறை அமைச்சு.
எம்.எம்.பீ.கே. மாயாதுன்னே - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு.
எஸ்.ஹெட்டியராச்சி - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு.
ஆர்.பீ. ஆரியசிங்க - வெளிவிவகார அமைச்சு.
பராக்கிரம திஸாநாயக்க - துறைமுகங்கள்,கப்பல் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சு.
சுனில் ஹெட்டியராச்சி - பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சு.
பிரதமரின் பொறுப்பின் கீழ் வரும் அமைச்சுக்களின் செயலாளராக தமிழர் நியமிப்பு - Reviewed by Author on December 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.