அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாக் பீல்ட் உடன் பிரித்தானிய தமிழர் பேரவை சந்திப்பு -


இலங்கையில் தற்போது வெளிப்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் பல புதிய சவால்களையும், புதிய சந்தர்ப்பங்களையும் எதிர்நோக்கியுள்ளது.
இதனை காலத்திற்கேற்ற முறையில் நுட்பமாக கையாண்டால் எமது போராட்டத்திற்கு அதனை சாதகமாக மாற்ற முடியும்.

உலகின் பலம் வாய்ந்த அதிகார மையங்களின் பலப் பரீட்சையில் சிக்கியுள்ள இலங்கை தீவு இன்று உலகின் பார்வையில் அம்பலப்பட்டு நிற்கின்றது.
இலங்கையில் நிலையான சமாதானம், நல்லிணக்கம், வளர்ச்சி என்பவை சாத்தியமாக வேண்டுமாயின் காலத்திற்கு காலம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் கொடூர வன்முறைகள் ஏன் இடம்பெறுகின்றன என ஆராயப்பட்டு, மூல காரணம் கண்டறியப்பட்டு ஒட்டு மொத்த கட்டமைப்புகளில் தேவையான மாற்றம், நிலைமாறு கால நீதி கோட்பாட்டின் (Transitional Justice) அடிப்படையில் கொண்டு வரப்பட வேண்டும்.

நாம் வாழும் நாடுகளின் முடிவெடுக்கும் பிரதிநிதிகளை எம் கோரிக்கைக்கு சாதகமாக இணங்க வைக்க வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களின் உடனடி மற்றும் நீண்ட கால கோரிக்கைகளுக்காக பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தொடர்ச்சியான பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் அமெரிக்க தமிழர் அரசியற் செயலவை (USTPAC) உடன் இணைந்து வாஷிங்டனிலுள்ள அமெரிக்க வெளி விவகார அலுவலகத்துடன் (US State Department) மேற்கொள்ளப்பட்ட சந்திப்பொன்றில் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்கள், அதனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள், மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான (APPGT) ஜோன் ரயன் (Rt Hon Joan Ryan MP), ஷிவொன் மக்டோன்னா (Siobhain McDonagh MP), டொம்பிரேக் (Rt Hon Tom Brake MP), போல் ஸ்கல்லி (Paul Scully MP) உடன் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இணைந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சராக (Foreign & Commonwealth Minister) இருக்கும் மாக் பீல்ட் (Rt Hon Mark Field MP) உடன் டிசம்பர் 3ஆம் திகதி ஒரு சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா.மனித உரிமைக்கழக (UNHRC) கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தல், குற்றம் இழைத்தவர்க்கு எதிரான பயணத் தடை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் (Universal jurisdiction) அடிப்படையிலான நடவடிக்கைகள், சொத்து முடக்கம் (Asset freeze) போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டன.

இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாமல் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் காலம் கடத்தலில் ஈடுபட்டு யுத்தத்தின் சாட்சிகளையும், சாட்சியங்களையும் அழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் யுத்தத்தில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதில் குறியாய் செயல்படுகின்றது என்பன ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அவர்களது உறவினர்கள் படும் துன்பங்கள், மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள், இலங்கை அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேசத்தினூடாக ஒரு சிறப்பு நீதிமன்றம் (Special International Tribunal) அமைத்து அதனூடாக இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு விசாரித்தல் உள்ளடங்கலாக பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாக் பீல்ட் உடன் பிரித்தானிய தமிழர் பேரவை சந்திப்பு - Reviewed by Author on December 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.