அண்மைய செய்திகள்

recent
-

பெண்களை தாக்கும் கருப்பை நீர்கட்டி! சரி செய்வது எப்படி? -


பொதுவாக பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும்.
இது ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என அழைக்கப்படுகிறது.

பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது.
அடிக்கடி அபார்ஷன். அதிக டெலிவரி. மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்சனை ஏற்படும் அதிகம் வாய்ப்பு உண்டு.
நீர்க்கட்டியை எளிதில் சரி செய்யும் வைத்தியங்கள் சிலவற்றை கீழே காண்போம்.
  • காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
  • மோருடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும்.
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும்.
  • வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி குடிப்பது நல்லது.
  • ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.
  • தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.
  • நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.
  • பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும். இதனால் நீர்கட்டி குறையும்.

பெண்களை தாக்கும் கருப்பை நீர்கட்டி! சரி செய்வது எப்படி? - Reviewed by Author on December 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.