அண்மைய செய்திகள்

recent
-

இந்த அரிய இலையை நீரில் போட்டு வைத்தால் இவ்வளவு மருத்துவ பயனா?


கட்டுக்கொடி தோட்டங்களில் உள்ள வேலிகளில், சாலையோர புதர்கள் மண்டிய இடங்களில் படர்ந்து தானாக வளரும் ஒரு கொடி வகையாகும்.
இது சித்தமருத்துவத்தில் சிறந்து விளங்கும் ஒரு மூலிகை ஆகும்.
அதுமட்டுமின்றி ஆன்மீகத்தில், சித்து வேலைகளில் கட்டுக்கொடி மூலிகையை அரிய சக்தி மிக்க ஆகர்ஷண மூலிகையாகப் பயன்படுத்தினர்.
இத பல்வேறு நோய்களுக்கு மற்றும் இதன் பொதுப் பலன்களாக, சூட்டைத் தணித்து, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும், குழந்தைகளின் வயிற்று வலி பாதிப்புகளை சரி செய்யும். உடலைத் தேற்றும். சிறந்த வியாதி எதிர்ப்புத் திறன் உடையது.

இந்த இலைகளை பல்வேறு வழிமுறைகளில் சாப்பிடும்போது உடலைக் கட்டுக்கோப்பா இருப்பதால் இதற்கு முன்னோர்கள் கட்டுக்கொடி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தற்போது இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் ? இதில் என்ன என்ன மருத்துவப்பயன்கள் உள்ளது என்பதை பார்ப்போம்.
எப்படி சாப்பிடனும்?
கட்டுக்கொடியின் இலைகள் அதிக சக்தி மிக்கவை, சில இலைகளை தண்ணீரில் இட்டு, சற்று நேரம் கழித்துப் பார்த்தால், தண்ணீர் ஜெல் போல, கெட்டியாக இருக்கும். மேலும், உப்பையும் இது போல, தன்மை மாற வைக்கும்.
சிறந்த மருத்துவப் பலன்களைத் தரவல்ல கட்டுக்கொடியின் இலைகள் சிலவற்றை எடுத்து நன்கு அலசிய பின், இலைகளில் இருந்து சாறெடுத்து, ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு, அத்துடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வைத்து, சற்று நேரம் கழித்துப் பார்த்தால், பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்கு கட்டியாகி இருக்கும்.

நன்மைகள்
  • கட்டுக்கொடி நீர் மருந்து பொதுவாக, திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல உடல் வலுவைத் தரும் மற்றும் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊக்க மருந்தாகவும் திகழ்கிறது.
  • சிறிது கட்டுக்கொடி இலைகளை மென்று தின்று வர, மேலே சொன்ன பாதிப்புகள் யாவும் உடனடியாக விலகி விடும். மேலும், மூல வியாதியால் ஏற்படும் ஆசன வாய் பாதிப்பும் தீரும்.
  • சிறிதளவு கட்டுக்கொடி வேர், சிறிது சுக்கு மற்றும் மிளகு சேர்த்து சற்று அரைத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ச்சி, தினமும் மூன்று வேளை, இந்த நீரைப் பருகி வர, வாதத்தால் ஏற்பட்ட வியாதிகள், மற்றும் வலிகள் போன்றவை உடலை விட்டு, நீங்கும்.
  • கட்டுக்கொடி இலைகள் மற்றும் வேப்பிலைக் கொழுந்துகள் இவற்றை அரைத்து, காலையில் சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்பினால் ஏற்பட்ட உடல் அசதி, சோர்வு, உடல் எரிச்சல், தாகம் மற்றும் சிறுநீர் பிரியும்போது ஏற்படும் நீர்க்குத்தல் சரியாகும்.
  • கட்டுக்கொடி இலைச்சாற்றை தண்ணீரில் இட்டு, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து மூடி வைத்து சற்று நேரம் கழித்து, கெட்டியாக மாறிய அந்தக் கலவையை சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதாந்திர பிரச்னைகள் மற்றும் உடல் சூட்டினால் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள் தீரும்.
  • கை கால் கழுவாமல் உணவு உண்பது, தண்ணீர் அருந்துவது போன்ற குழந்தைகளின் விளையாட்டுத் தனங்களால், சமயங்களில் நச்சுத் தொற்று ஏற்பட்டும் இந்த பாதிப்பைப் போக்க, கட்டுக்கொடி வேர் மற்றும் களஞ்சிப்பருப்பு இவற்றை சேர்த்து மைய அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து, அரை தம்ளர் தண்ணீரில் கலந்து கொடுக்க, குழந்தைகளின் வயிற்றில் உள்ள நச்சுக்கள் அழிந்து, வயிற்று வலி பாதிப்புகள் அகன்று விடும்.
  • கட்டுக்கொடி இலைகளை உலர்த்தி, பின்னர் இலைகளை நன்கு இடித்து தூளாக்கிக் கொண்டு, இதை தினமும் சிறிது சாப்பிட்டு வர, சர்க்கரை பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட சிறுநீர் கோளாறுகள் விலகும்.
  • கட்டுக்கொடி இலைச்சாற்றை சற்று பிழிந்து, அதை சிறிது தண்ணீரில் கலந்தால், தண்ணீர் கெட்டிப்பட்டு விடும். அந்த நீரை, சருமத்தில் பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வர, சொறி, சிரங்கு மற்றும் சரும வியாதிகள் அனைத்தும் நீங்கும்.
  • கட்டுக்கொடி இலைகளை மையாக அரைத்து, அதைப் பாலில் கலந்து, தினமும் இருவேளை பருகி வர, உடல் வலி மற்றும் இடுப்பு வலி நீங்கும். உடல் வியாதி எதிர்ப்புத் தன்மை பெற்று, வலுவாகும்.
  • கட்டுக்கொடி இலைகளை சாறெடுத்து, நீரில் இட்டு சற்று நேரம் கழித்து கெட்டியாகும் அந்தக் கலவையை, சிறிது எடுத்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, பெண்களுக்கு மாதாந்திர விலக்கில் ஏற்படும் சோர்வு நீங்கி, உடல் நிலை சரியாகும்.
இந்த அரிய இலையை நீரில் போட்டு வைத்தால் இவ்வளவு மருத்துவ பயனா? Reviewed by Author on January 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.