அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-"உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்"அங்குரார்ப்பண நிகழ்வு-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் மடுக் கல்வி வலயத்தில் G.C.E O/L பாடத்திட்டத்தில் 9 பாடங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட காலம் தொடக்கம் 2017 ஆம் ஆண்டு G.C.E O/L பரீட்சை பெறுபேறு வரை 9A என்பது கிடைக்கப் பெறவில்லை என்பதை உணர்ந்த மன்/ தட்சனாமருதமடு மகா வித்தியாலய அதிபர்
திரு. அ.ஜெரால்ட் அல்மேடா அவர்களினால் "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற ஆய்வு நிலை முயற்சி இன்று 20/02/2019 புதன்கிழமை இறைவன் ஆசியுடன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் G.C.E O/L கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் இவர்களுடன் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி
திரு.S.R.யதீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

திறமையான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் ஆயினும் தேவையான புதிய வெளியீடுகளான பயிற்சிப் புத்தகங்கள் , மாதிரி வினாத்தாள்கள் , எதிர்பார்க்கை வினாத்தாள்கள் என்பவற்றை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக தேவையான அளவு வழங்குவதுடன் தேவையான நேரத்தில் கருத்தரங்குகளை செய்யும் போது "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற கருப்பொருளில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது

இந்த உயரிய சிந்தனையில் எழுச்சி பெற்ற அதிபர் ஆசிரியர்களினால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உற்சாகம் வழங்கப்பட்டதுடன் தேச கீர்த்தி ,தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்கள் தேவையான புதிய வெளியீடுகளான பயிற்சிப் புத்தகங்கள் , மாதிரி வினாத்தாள்கள் , எதிர்பார்க்கை வினாத்தாள்கள் என்பவற்றை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக தேவையான அளவு வழங்கியதுடன் தேவையான நேரத்தில் கருத்தரங்குகளை செய்யும் அனுசரணைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு "உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்" என்ற ஆய்வு நிலை முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்ல சிந்தனை இப்படியான கல்விச்செயற்பாடுகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நியூமன்னார் இணையம் வரவேற்கின்றது








மன்னார்-"உதயமாகட்டும் 9A மடுக் கல்வி வலயத்தில்"அங்குரார்ப்பண நிகழ்வு-படங்கள் Reviewed by Author on February 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.