அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் -


மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக அனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தை சில பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்த செய்திகளை அடுத்து இலங்கை அழிந்து போனதாக கூறப்படும் காட்டில் வாழும் குள்ள மனிதர்கள் சம்பந்தமாக மீண்டும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மஹாவிளச்சி - எத்தக்கல்ல பிரதேசத்தில் குள்ள மனித தன்னை கீறி விட்டு சென்றதாக பெண்ணொருவர் கூறியுள்ளார். மேலும் சில பெண்கள் இதே அனுபவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மிகவும் சிறிய உயரம் கொண்ட குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மரபு வழி கதைகளில் கூறப்படுகிறது. இந்த குள்ள மனிதனை சில தினங்கள் நேரில் பார்த்ததாக அம்பாறை - தமண தொட்டம பிரதேசத்தை சேர்ந்த சேனை பயிர் செய்கை விவசாயிகள் சிலர் கூறியிருந்தனர்.

குள்ள மனிதன் பாதச்சுவடுகளும் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.
அம்பாறை - தொட்டம பகுதியில் குள்ள மனிதன் தென்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பிரிவினர் ஆய்வு செய்துள்ளனர்.
18 ஆம் நூற்றாண்டு வரை இந்த குள்ள மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்கு அருகில் இவர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குள்ள மனிதர்கள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை சரியான பௌதீக சாட்சியங்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், குள்ள மனிதர்கள் எனக் கூறப்படுவது மனிதனை போன்று இரண்டு கால்களில் நடந்துச் செல்லும் விலங்கின் முகமும் உடலில் ரோமங்கள் நிறைந்த மற்றும் நீண்ட நகங்களை கொண்ட உயிரினம் என சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் குள்ள மனிதர்கள் எனக் கூறப்படும் இந்த மனிதர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக வேடுவ மக்கள், அவர்களை படுகொலை செய்ததாக மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் - Reviewed by Author on February 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.