அண்மைய செய்திகள்

recent
-

நரைமுடி கருப்பாக இதோ இயற்கையான வழிமுறைகள்


நரைமுடி பிரச்சனை என்பது தற்போது இளம் வயதினருக்கு கூட அதிகம் வருகிறது. இதனால் நரைமுடியை உடனடியாக கருமையாக்க பல்வேறு ஹேர் டை பயன்படுத்துவார்கள்.

ஆனால் இவற்றில் உள்ள கெமிக்கல்கள் மீதி உள்ள முடி மட்டுமல்லாது சமருத்திற்கும் பிரச்சனையை உண்டாக்கும்.
வெள்ளை முடிகளை கருப்பாக மாற்ற இயற்கை மூலிகைகளுக்கு ஈடாக ஏதுமே இருக்க முடியாது.

இவை மயிர்கால்களுக்கு மெலனின் என்ற ஹார்மோனை செலுத்தி வெள்ளை முடியை கருமையாக மாற்றுகிறது.
இயற்கை வழிகள் சிலவற்றின் மூலம் வெள்ளை முடியை பழைய நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.
  • கற்பூர வள்ளி இலைகளை நீரில் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு அதை தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். சில வாரங்கள் தொடர்ச்சியாக செய்தால் நரை முடி மறைவதை காணலாம்.
  • கருப்பு தேயிலைகளை சிறிது அளவு நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஆற வைத்த பிறகு அந்த நீரை தலையில் தேய்த்து 1 மணி நேரம் பிறகு தலைமுடியை வெறுமனே அலசுங்கள்.
  • எள்ளுவை நீரில் ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனை தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.
  • தோட்டத்திலிருக்கும் ஆழமான மண்ணை தோண்டி அதை நீரில் கரைக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய நீரை தலையில் தேய்க்கவும். 10 நிமிடம் கழித்து நன்றாக தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் நரை முடி மறையும்.

நரைமுடி கருப்பாக இதோ இயற்கையான வழிமுறைகள் Reviewed by Author on February 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.