அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்க நகர சபையின் தலைவர் நடவடிக்கை-படங்கள்

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்கும் நடவடிக்கைகயினை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேற்கொண்டுள்ளார்.

அதற்கு அமைவாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் பனிப்புரைக்கு அமைவாக மன்னார் பிரதான பால பகுதியில் இன்று புதன் கிழமை 27-02-2018 காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.

மன்னார் பிரதான பாலம் மன்னார் நுழைவாயில் பகுதியின் இரு பகுதிகளிலும் பற்றைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் என்பன காணப்பட்டது.
மேலும் மன்னார் பாலத்தடியில் மக்கள் பொழுது போக்கிற்காக வந்து செல்லும் கையில் சுற்றுலாத் தளம் அமைக்கும் நடவடிக்கைகளையும் நகர சபையின் தலைவர் மேற்கொண்டுள்ளார்.

தற்போது சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது






மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்க நகர சபையின் தலைவர் நடவடிக்கை-படங்கள் Reviewed by Author on February 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.