அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறையில் தனியாருக்குச் சொந்தமான காணியை அபகரிக்கும் நடவடிக்கையில் முசலி பிரதேச சபை--உரிமையாளரினால் வழக்குத்தாக்கல்-

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பகுதியில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் முசலி பிரதேச சபை அனுமதி இன்றி காணிக்குள் உட்பிரவேசித்து காணியை அடாத்தாக பிடித்து அடைத்துள்ளமை தொடர்பாக குறித்த காணியின் உரிமையாளர் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தெரிவித்தார்.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பகுதியில்   1959 ஆம் ஆண்டில் இருந்து குறித்த தனி நபருக்கு சொந்தமான குறித்த காணியில் கடந்த 21 ஆம் திகதி குறித்த காணியின் உரிமையாளரின் எவ்வித அனுமதியும் இன்றி முசலி பிரதேச சபை  குறித்த காணிக்கு வேலி அடைத்து குறித்த காணி 'முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்டது'என பெயர்ப் பலகையும் நாட்டப்பட்டுள்ளது.

மேலும் குறித்த காணியில் முசலி பிரதேச சபைக்குச் சொந்தமான சில வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே தனது காணியில் அத்து மீறி முசலி பிரதேச சபை செயற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தன்னிடம் குறித்த காணியின் உரிமையாளர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக முசலி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த காணிக்கான முழுமையான ஆவணங்கள் குறித்த காணியின் உரிமையாளரிடம் காணப்படுகின்றது.

எனினும் முசலி பிரதேச சபை ஏன் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை என அவர் மேலும் தெரிவிதார்.

குறித்த விடையம் தொடர்பாக முசலி பிரதேச சபையின் தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது,,

குறித்த காணியானது 2009 ஆம் அண்டியில் இருந்து பராமரிப்பு அற்ற நிலையில் காணப்பட்டது.குறித்த காணியினை முச்சக்கர வண்டி தரிப்பிடமாக பயண்படுத்தப்பட்டது.

குறித்த காணியினால் சுகாதார அசௌகரியங்கள் எற்படுவதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.மேலும் பொது மலசல கூடம் அமைக்க அப்பகுதியில் இடம் இல்லை.எனவே குறித்த காணியில் பொது மலசல கூடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் தனி நபருக்கு சொந்தமானது என குறித்த காணியில் அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே முசலி பிரதேச சபை குறித்த காணியை பொது தேவைக்காக பயண்படுத்த உள்ளது.என தெரிவித்தார்.

இதே வேளை குறித்த காணியின் உரிமையாளர் முசலி பிரதேச சபையின் அத்து மீறிய செயற்பாடு தொடர்பில் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு,மன்னார் நீதி மன்றத்திலும் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





சிலாவத்துறையில் தனியாருக்குச் சொந்தமான காணியை அபகரிக்கும் நடவடிக்கையில் முசலி பிரதேச சபை--உரிமையாளரினால் வழக்குத்தாக்கல்- Reviewed by Author on February 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.